பழங்கள், காய்கறிகள் சாப்பிட்டாலும்புற்றுநோய் ஆபத்தை தடுக்க முடியாது:ஆய்வில் தகவல்
பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதால், புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை' என்று, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கு, புகையிலை பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை அதிகம் சாப்பிட்டு வந்தால், புற்றுநோயை நோயை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த கருத்துக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
புற்றுநோய் மற்றும் அது தொடர்பான உணவு பழக்கவழக்கங்கள் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அந்த ஆய்வின் முடிவு சமீபத்தில், பல்கலைக்கழகத்தின் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:புற்றுநோயை, காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. முறையான உணவு பழக்கவழக்கங்கள், சிகிச்சை முறை உள்ளிட்டவற்றின் மூலம் மட்டுமே அதை கட்டுப்படுத்த முடியும்.
காய்கறிகளும், பழங்களும் நமது உடல்நலத்திற்கு மிக முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால், புற்றுநோயை அவை கட்டுப்படுத்தும் என்பது நிரூபிக்கப்படவில்லை. புகைப்பிடிக்கும் பழக்கம், மது, உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களே புற்றுநோய்க்கு முக்கிய காரணம்.உடல் பருமன் குடல், கிட்னி உள்ளிட்ட பகுதிகளில், புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும். புகைப்பிடிப்பதால், நுரையீரல், வாய், குடல் பகுதிகளில் புற்றுநோய் பாதிக்கும். நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதன் மூலம், குணமாக்கக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கும்.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "பழங்கள், காய்கறிகள் சாப்பிட்டாலும்புற்றுநோய் ஆபத்தை தடுக்க முடியாது:ஆய்வில் தகவல்"
Post a Comment