Youtube-ல் தரம் மிகுந்த(High Quality) வீடியோக்களை மட்டும் தேட

இணையத்தில் Youtube பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. Youtube என்பது  ஆன்லைனில் வீடியோக்கள் பகிரும் தளமாகும். இதில் பல ஆயிரகணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நல்ல தரமான வீடியோக்களும் மற்றும் தரம் குறைந்த வீடியோக்களும் கலந்து இருக்கும். 
நாம் ஏதேனும் வீடியோவை ஆவலுடன் தேடினால் இதில் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும். ஒரு சில வீடியோக்கள் ஆரம்பத்தில் சரியாக போகும் நடுவில் பிரச்சினையை ஏற்ப்படுத்தும். ஆகையால் நாம் தேடும் போதே தரம் மிகுந்த வீடியோக்களை மட்டும் தனியாக எப்படி தேடுவது என்று இங்கே பார்ப்போம். 
  • இதற்காக எந்த மென்பொருளும் உபயோகிக்க தேவையில்லை.
  • முதலில் நீங்கள் Youtube தளத்திற்கு செல்லுங்கள். 
  • உங்களுக்கு youtube தளம் திறந்தவுடன் அங்கு உள்ள Search பாரில் உங்களுக்கு தேவையான வீடியோவுக்கு சம்பந்தமான வார்த்தையை கொடுக்கவும்.
  • இது நாம் அனைவரும் செய்யும் முறை. அந்த வார்த்தையை கொடுத்து சர்ச் செய்தால் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும். 
  • இதில் தரம் மிகுந்த(High Quality) வீடிக்களை மட்டும் தனியே பிரிக்க நீங்கள் கொடுத்த வார்த்தைக்கு பக்கத்தில் '&fmt=18' (Stereo, 480 x 270 resolution)  இந்த வரியை கொடுக்கவும். 
  • அல்லது '&fmt=22' (Stereo, 1280 x 720 resolution) இந்த வரியை கொடுக்கவும். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.

(OR)

  • உங்கள் வார்த்தைக்கும் இந்த வரிகளுக்கும் இடைவெளி விடவேண்டாம். தொடர்ந்து டைப் செய்யவும். 
  • நீங்கள் தேடும் வீடியோக்களில் இந்த தரங்களில் வீடியோ இருந்தால் மட்டுமே உங்களுக்கு வரும் இல்லையேல் NO VIDEOS FOUND என்ற செய்தி தான் வரும். அதற்க்கு கீழே தரம் குறைந்த வீடியோக்கள் வரும் அதில் பார்த்து கொள்ளவும்.

0 Response to "Youtube-ல் தரம் மிகுந்த(High Quality) வீடியோக்களை மட்டும் தேட"

Post a Comment