Device Driver களைப் பாதுகாக்க Double Driver
ஒரு கணினியை வாங்கும்போது கூடவே ஒரு சீடியும் தருவார்கள். அந்த சீடியில் கணினியில் பொருத்தியுள்ள எல்லா விதமான வன்பொருள்களையும் இயங்க வைக்கும் மென்பொருள்கள் அடங்கியிருக்கும். அதனை (டீவைஸ்) ட்ரைவர் சீடி என்பார்கள்.
டிவைஸ் ட்ரைவர் மென்பொருளானது வன்பொருள் சாதனத்துக்கும் இயங்குதளத்துக்குமிடையில் தொடர்பாடலை உருவாக்கும் ஒரு மத்தியஸ்தராகச் செயற்படுகிறது. ஒவ்வொரு வன்பொருள் சாதனமும் ஒரு டிவைஸ் ட்ரைவர் மென்பொருளைக் கொண்டிருக்கும். . அதன் மூலமாகவே இயங்கு தளம் அந்த சாதனத்தைக் கண்டு கொண்டு அதனை முறையாக இயக்குகிறது.
கணினியில் தேவையான அனைத்து டிவைஸ் ட்ரைவர்க்ளும் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தாலும் ஹாட் டிஸ்கை போமட் செய்து மறுபடி இயங்கு தளத்தை நிறுவ வேண்டிய தேவை ஏற்பட்டால் ஒவ்வொரு சாதனத்துக்குமுரிய டிவைஸ் ட்ரைவரையும் மறுபடியும் நிறுவ வேண்டி இருக்கும். அதனால் எப்போதும் டிவைஸ் ட்ரைவர் சீடியை கவனமாக வைத்திருத்தல் அவசியம்.
ட்ரைவர் சீடி பழுதடைந்து விட்டால் அல்லது அதனைத் தொலைத்து விட்டால் எனன செய்வது? அதேபோன்று பழைய பாவித்த கணினிகளை வாங்கும்போது அனேகமாக அதற்குரிய ட்ரைவர் சிடிக்கள் கிடைப்பதில்லை.
தேவையான டிவைஸ் ட்ரைவரை இணையத்திலிந்து டவுன்லோட் செய்து கொள்ளலாமே என நீங்கள் நினைக்கலாம். இணையத்திலும் இல்லாதபோது ட்ரைவர் சீடியைத் தேடி எங்கே செல்வது?
கணினி வன்பொருள் சாதனங்களுக்குத் தேவையான உரிய ட்ரைவர் மென்பொருளைத் தேடிப்பெறுவது எவ்வளவு கடினமான வேலை என்பதை அந்த நிலைமையை எதிர் கொண்டவர்களே அறிவார்கள்.
இது போன்ற ட்ரைவர் மென்பொருள் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருகிறது டபிள் ட்ரைவர் (Double Driver) எனும் சிறிய மென்பொருள் கருவி. இந்த டபிள் ட்ரைவர் மூலம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள ட்ரைவர் மென்பொருள்கள் அனைத்தையும் தனியாக ஒரு சீடியிலோ அல்லது ஹாட் டிஸ்கிலோ பாதுகாப்பாக (Back up) சேமித்துக் கொள்லலாம் ,
டபிள் ட்ரைவர் இலகுவான இடை முகப்பைக் கொண்ட ஒரு பயனுள்ள ஒரு இலவச யூட்டிலிட்டி. இதன் மூலம் கணினியில் நிறுவப்பட்டுள்ள ட்ரைவர் மென்பொருளகளைப் பார்வையிடுவதோடு, அவற்றைப் பாதுகாப்பாகவும் சேமிக்கவும், சேமித்ததிலிருந்து மறுபடி ரீஸ்டோர் (restore) செய்யவும் முடிகிறது. .
டபிள் ட்ரைவர் யூட்டிலிட்டி கணினியை முழுமையாகப் பரீட்சித்து ட்ரைவர் மென்பொருள்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் எமக்குக் காண்பிக்கிறது. அதனை பேக்கப் செய்து விட்டு தேவையான போது பேக்கப்பிலிருந்து உரிய மென்பொருளை ரீஸ்டோர் செய்து கொள்ளலாம் ;.
விண்டோஸின் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் செவன் பதிப்புகளில் சிறப்பாக இயங்குகிறது. டபிள் ட்ரைவர். .exe பைலாகக் கிடைக்கும் இந்த யூட்டிலிட்டியை கணினியில் நிறுவ வேண்டிய அவசியமுமில்லை,
இந்த டபிள் ட்ரைவர் மென்பொருளை http://www.boozet.co.cc/ எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்
0 Response to "Device Driver களைப் பாதுகாக்க Double Driver"
Post a Comment