நீங்களும் முதலுதவி அளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
ஆரம்பித்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறோம். ஒரு கையோடு இருந்தால் போதும். எல்லா சந்தர்ப்பங்களும் நாமாகவே சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று நினைத்துவிடாதீர்கள். காரணம் சிகிச்சை முறைகள் நபருக்கு மாறுபடும். சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். ஆனாலும் சில பொதுவான விதிகளை மட்டுமே இங்கே தொகுத்துள்ளோம்.
முதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று:
1.உயிரைப் பாதுகாக்க வேண்டும்.
2.நிலைமை மோசமாவதைத் தடுக்க வேண்டும்.
3.சீக்கிரத்தில குணமளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது தைரியம். பாதிக்கப்பட்டவர்களைத் தேற்றி, ஆறுதல் சொல்ல வேண்டும். பயப்படக் கூடாது. தவிரவும் வேறு சில பொறுப்புகளும் உள்ளன.
1. உடனடியாக நிலைமையை ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும். பதட்டப்படக் கூடாது. தகுந்த மருத்துவ உதவி கிடைக்க உதவ வேண்டும்.
2. தீ விபத்தில் சிக்கிக் கொண்ட ஒருவருக்கு முதலுதவி அளிக்க வேண்டும் என்றால் முதலில் முதலுதவி அளிக்க முன்வருபவருக்குத் தன்னை பாதுகாக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிறகு, பாதிக்கப்பட்டவர், பிறகு அருகில் இருப்பவர்.
3. பாதிப்பின் தன்மையை சரியாக உணர்ந்துகொள் வேண்டும்.
4. உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர் மீது நம் கவனம் முதலில் திரும்ப வேண்டும்.
5. சம்பந்தப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கோ, வீட்டுக்கோ, மருத்துவரிடமோ அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். தக்க வாகனங்களைத் தயார் செய்ய வேண்டும்.
6. மருத்தவ உதவி கிடைக்கும்வரை சம்பந்தப்பட்டவருக்கு அருகேயே இருக்க வேண்டும்.
7. நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும்.
எப்படிச் சமாளிப்பது?
நிதானத்துடன், பதற்றமில்லாமல், இவை இரண்டும் மிக மிக முக்கயம். மேலும் சில குறிப்புகள் கீழே -
1. சூழ்நிலையை உணர்தல்
2. பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல்
3. அவசர சிகிச்சை அளித்தல்
4. உதவி பெறுதல்
5. மீண்டு வருதல்
அடிப்படை உயிர் பாதுகாப்பு முறை
1. பாதிக்கப்பட்டவர் உடன் இருப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பாதுகாப்பு முக்கியமானது.
பேச்சு மூச்சு இல்லையா?
கத்தி உதவி கேட்கவும்
காற்றோட்டம் ஏற்படுத்தவும்
சுவாசம் சீராக இருக்கிறதா?
அருகிலுள்ள அவசர சிகிச்சை எண்ணைத் தொடர்பு கொள்ளவு.
30முறை நெஞ்சை அழுத்தம் முறை
சுவாச மீட்டு (2முறை)
0 Response to "நீங்களும் முதலுதவி அளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்"
Post a Comment