Yahoo Mail இல் குறிப்பிட்ட மின்னஞ்சல்களைத் தடை செய்வது எப்படி?
விளம்பரங்கள் மற்றும் குப்பை மின்னஞ்சல்கள் மற்றும் தொந்தரவு செய்யும் நண்பர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களால் இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறதா? இவற்றை நிறுத்துவதற்கு சிலர் பாடுபடுவர். ஆனால் நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையிலேயே இத்தகைய வசதிகள் உள்ளன. ஜிமெயிலைப் போலவே யாகூ மெயில் (Yahoo mail) பயன்படுத்துபவர்களும் வேண்டாத / குறிப்பிட்ட மின்னஞ்சல்களை தடை செய்யலாம்.
யாகூ மெயிலில் 500 மின்னஞ்சல் முகவரிகள் வரை சேர்க்கலாம். ஒரு முறை சேர்த்துவிட்டால் போதும், அவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் நீங்கள் படிப்பதற்கு முன்பாக எல்லாம் தானாகவே அழிந்து விடும்.
Blocked senders எனப்படும் வரிசையில் தேவையில்லாத மின்னஞ்சல் முக்வரிகளை சேர்த்து விடலாம். விருப்பமில்லாத மின்னஞ்சல்களைப் பெற்று பின்னர் ஒவ்வொன்றாக அழிப்பதற்கு யாகூ மெயிலே அழித்துவிடும்.எப்படி என்று பார்ப்போம்.
1.உங்கள் Yahoo மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து வலது மேல் ஒரத்தில் உள்ள Options -> More options… செல்லவும்.
2.இடதுபக்கம் வரும் மெனுவில் Spam என்பதை கிளிக் செய்யவும். வலது பக்கமுள்ள Blocked Email addresses பகுதியில் உங்களுக்கு வேண்டிய
மின்னஞ்சல்களை சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் சேர்க்க சேர்க்க அவர்களின் பெயர்கள் கீழே தெரியும்.
3.கடைசியாக மேலெ உள்ள Save changes என்பதை கிளிக் செய்தால் உங்களின் விருப்பம் சேமிக்கப்படும்.
இனிமேலும் உங்களை தொந்தரவு செய்யும் மின்னஞ்சல்களை நீங்கள்
பார்வையிடப்போவதில்லை.
0 Response to "Yahoo Mail இல் குறிப்பிட்ட மின்னஞ்சல்களைத் தடை செய்வது எப்படி?"
Post a Comment