Showing posts with label ஆடவர். Show all posts
Showing posts with label ஆடவர். Show all posts

மலட்டுத் தன்மையை எதிர்நோக்கும் ஆண்கள்

அரிது அரிது மானிடராதல் அரிது என்பார்கள். மனித பிறவி அத்துணை உயரிய-அரிய பிறவி அப்படிப்பட்ட ஒரு பிறப்பினை எய்தியவர்கள், இவ்வுலக வாழ்க்கையை முறைப்படி வாழும் போது தெய்வத்துக்குச் சமானமானவர்கள் ஆகிறார்கள்.

ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர், தங்கள் மனம்போல வாழ்ந்து, கண்டபடி திரிந்து, வரைமுறையற்றுப் போய் இருக்கிறார்கள்

 அண்மைக் காலமாக ஆண்மைக் குறைவு, ஆண் மலட்டுத் தன்மை போன்றவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.

 முற்காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை வரைமுறையான வாழ்வுச் சூழல் இரசாயனக் கலப்பற்ற இயற்கை உணவுகள், பெரியவர்களின் வழி நடத்துதல், ஒழுக்கமான வாழ்வு முறை, ஆண்கள் சமூகத்தில் நல்ல சரீர-மன வளத்துடன் வாழ உதவின. ஆண்மைக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் தலை தூக்கியது இல்லை

 ஆனால் இன்று இதற்கு நேர்மாறான நிலை இருக்கிறது

 நாம் சுவாசிக்கிற காற்றில்கூட கலப்படம், குடிக்கிற தண்ணீர் கூட சுத்தமானதாக, சுகாதாரமானதாக இல்லை மனிதன் எந்திரங்களோடு எந்திரமாகவே மாறிப் போய் வாழ்ந்து வருகிறான்.

 எதிலும் நாரிகம், அவசரம் என்ற பெயரில் பாஸ்ட் புட் அந்த ரசாயனக் கலவைகள் உடலில் பக்க விளைவுகளை சேர்த்துக் கொண்டு இருக்கின்றன. இந்த விளைவுகளால்தான் ஆண் விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கை உலகளாவிய அளவில் குறைந்து விடுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆண் விந்துவில் உயிரணுக்கள் அறவே இல்லாதவர்களும் கூடி வருகிறார்கள். இன்னும் சிலருக்கு விந்துவில் செத்த அணுக்களே பிரதானமாக இருக்கின்றது.

 சுதந்திரத்துக்குப் பிறகு சுதந்திரம் என்ற பெயரில் மேற்கத்திய கலாச்சாரத்தால் கெட்டுப் போன நிலைதான் இன்றைய ஆண்களின் ஆண்மைக் குறைவு, ஆண் உயிரணு அறவே இல்லாத நிலைமை, பாலியல் நோய்கள், எய்ட்ஸ் போன்ற பிரச்சினைகள்

 பெற்றோர்களும் இன்றைய பிள்ளைகளை எப்படி வழி நடத்துவது என்று தெரியாமல், திகைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சிலருக்கோ பிள்ளைகளை வழி நடத்த நேரமும் இல்லை.

 இளம் வயதிலே-குறிப்பாக டீன் ஏஜ் பருவத்திலே ஆண்களை ஒழுக்கமான வாழ்வுக்கு வழி நடத்தாததின் விளைவுதான் சுய இன்பம், பிஞ்சிலே பழுத்து பிற மாதர் உறவு, விலைமகள் தொடர்பு, ஹோமோ செக்ஸ் என்ற ஓரினப் புணர்ச்சி உள்ளிட்ட விபரீதங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.

 இத்தகைய செயல்பாடுகள், பின்னாளில் மலட்டுத் தன்மைக்கு வழி நடத்துகின்றன. சிலருக்கோ உயிரையே பறிக்கிற எய்ட்ஸாக மாறுகின்றது. இன்னும் சிலருக்கோ திருமணம் முடிந்து, முறைப்படி அனுபவிக்க வேண்டிய தாம்பத்ய இன்பத்தை மனைவியுடன் அனுபவிக்க இயலாமல் அவதியுறுகிற அவலம்... சொல்லிக் கொண்டே போகலாம்.

 இளைய தலைமுறை பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல அவர்களும் சுதந்திரம் என்ற பெயரில், நினைத்த நேரத்தில், நினைத்தவருடன் சுற்றித்திரிந்து, திருமணத்துக்கு முன்பே தாம்பத்ய சுகத்தை பெற்று விடுகிற அவலமும் நடக்கிறது. இதனால் பிறப்புறுப்பிலே தொற்று, கருப்பையிலே தொற்று உள்ளிட்ட பல பிரச்சினைகளை தாங்களே வரவழைத்துக் கொள்கின்றனர்.

 இவர்களில் பெரும்பாலோர் திருமணமாகி முறைப்படியான தாம்பத்ய உறவு, குழந்தைப் பேறு போன்றவற்றுக்கு வழியற்று, கண்ணீரில் வாழ்க்கையை கரைத்துக் கொண்டிருப்பதை மருத்துவத்தில் பார்க்கிறோம்.

 இப்படிப்பட்ட ஆண்மைக்குறைவு, பெண் மலட்டுத் தன்மை, திருமணத்துக்கு முன்னதாகவே பாலுறவு போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க தகுந்த விழிப்புணர்வு இங்கே உருவாக்கப்பட வேண்டும்.

 ஆரோக்கியமான வாழ்வுக்கு, ஒழுக்கமும், இயற்கை உணவும், பெரியவர்களின் வழிநடத்துதலும், சித்த மருத்துவமும் இணைந்து கை கொடுக்கும் ஏற்கத்தான் இன்றைய தலைமுறை தயாராக வேண்டும்.

தோழியாய்... காதலியாய்... மனைவியாய்... யாரடி நீ பெண்ணே?

ஒரு பெண் தோழியாய், காதலியாய், மனைவியாய், தாயாய்... என்று பல அவதாரங்கள் எடுக்கிறாள். ஒட்டுமொத்தமாக இவள் பெண் என்ற வட்டத்திற்குள் வந்தாலும், அவளது ஒவ்வொரு நிலையிலும் உயரியச் சிறப்பைப் பெறுகிறாள்.
 

 அப்படிப்பட்ட பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?


 போய் ப்ரண்ட், ஹேர்ள் ப்ரண்ட் என்றெல்லாம் இன்று பரிணாமம் பெற்றிருக்கும் நட்பு ஒரு காயாத பூவாகும். பள்ளிப்பருவத்தில் நம்முடன் படித்தவர், இடையில் காலத்தின் மாற்றத்தால் எங்கோ, எப்படியோ வாழும் சூழ்நிலையில், திடீரென்று ஒரு நாள் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்போது அங்கே கிடைக்கும் ஆனந்த பரவசம் இருக்கிறதே; அதை வர்ணிக்கத்தான் வார்த்தைகள் உடனே கிடைக்குமா?

 இதே நட்பில் சுயநலத்துடன் ஒரு வழிப்பாதையில் பயணிக்கும்போது, அந்த பெண் காதலியாகி விடுகிறாள் அவனுக்கு! அந்த ஆண்
அவளுக்கு காதலனாகி விடுகிறான்.

 "நான் செடியில் பூத்துக் குலுங்கும் ரோஜாவை தேடித்தான் வந்தேன். அந்த ரோஜாவே என்னெதிரே நடந்துவரும்போது, ரோஜாப்பூவை மட்டும் பறிக்கவா? அல்லது அந்த செடிக்கே நான் சொந்தக்காரனாகி விடவா? என்று குழப்பம் வந்துவிட்டது. அதனால் உன் மீது எனக்கு காதலும் வந்துவிட்டது" என்று காதலன் கவிதையாய் உருகும்போது அந்த காதல் இன்னும் கொஞ்சம் ஆழமாக வேர்விட்டு விடுகிறது.

 அவர்களது காதலுக்கு அவர்களே ஒரு அங்கீகாரம் கொடுக்கும்போது, அங்கே காதல் ஆலமரமாய், ஆழமாய் வேரூன்றி விடுகிறது. இருவரும் தங்களுக்குள் அங்கீகாரம் கொடுத்தபிறகு அந்த காதல் ரெயில் வேகத்தில் பயணிக்கிறது.
 அவர்களது காதல் பயணத்தில் பெற்றோர்கள் சிக்னல்களாக வருகிறார்கள்.

 அவர்கள் கிரீன் சிக்னல் கொடுத்தால் அந்த காதல் ரெயில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும். ரெட் சிக்னல் கிடைத்தால் அவர்களது பயணத்தில் திடீர் பிரேக் விழுந்து விடுகிறது. கிரீன் சிக்னலுக்காக போராடி வேண்டியிருக்கிறது.

 பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு அவர்களுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கலாம். அல்லது, எவ்வளவுதான் முயன்றும் ரெட் சிக்னலே தொடரலாம். இருந்தாலும், அவர்களுக்குள் காதல் வாழ்கிறது. அது தொடர்ந்து வாழ வழி தேடுகிறார்கள்.
 போராட்டம் என்றால் ஒரு முடிவு நிச்சயம் இருக்கும்தானே? அவர்களது காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது; அல்லது, இன்னொரு வாழ்க்கைக்குள் வலுக்கட்டாயமாக தள்ளப்படுகிறார்கள்.

 அங்கே வாழ்க்கையின் இன்னொரு அத்தியாயம் தொடங்குகிறது. காதலில் வெற்றிப்பெற்றுவிட்டால் அங்கே காதலனுக்கு காதலி மனைவியாகிறாள். இல்லையென்றால், புதுப்பெண் ஒருத்தி மனைவியாகிறாள்.
 இதுபோல்தான் பெண்ணுக்கும்!

 திருமணத்திற்கு பின்பு அவளது பொறுப்பு இன்னும் அதிகமாகி விடுகிறது. தாரத்திற்குப் பின்னர் தாய் என்ற நிலையை அடைகிறாள். அதன்பிறகும் அவளது பிறவிப்பயன் இன்னும் நீண்டு கொண்டே போகிறது, அவளது சேவை இந்த மனிதகுலத்திற்கு கண்டிப்பாக தேவை என்பதால்!

 எடுக்கும் ஒரு பிறவியிலேயே தோழியாய், காதலியாய், மனைவியாய், தாயாய் திகழும் அந்த பெண்ணிடம் எப்படி பழக வேண்டும்?


 முதலில் தோழி...



 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். இதேபோல், நல்ல தோழி அமைவதும் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லலாம்.

 ஒன்றும் தெரியாத முட்டாளையும்கூட முதல்வனாக்கிவிடும் பவர் (Power) தோழிக்கு உண்டு. அப்படிப்பட்ட தோழியிடம் நாம் எப்படி பழகலாம்?

 * நமது சமுதாயச்சூழலில் பெண்ணுக்கு ஆணைப் போன்ற முழு சுதந்திரம் இன்னும் வழங்கப்படவில்லை. தோழியாக பழக வேண்டும் என்றால்கூட ஒரு பெண் சமுதாய கட்டுப்பாடுகளைப் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. வாலிப பிரச்சினை என்று ஒன்று வரும்போது மிகுந்த பாதிப்புக்கு ஆளாகுபவள் பெண்ணே! அதனால், அவளது பெண்மைக்கு இழுக்கு ஏற்படாத வகையில் பழக வேண்டும்.

 * நட்பு காதலாக மாறலாம். ஆனால், காதல் நட்பு ஆக மாறுவது பெரும்பாலும் முடியாத செயல்தான். அதனால், தோழியை நீங்கள் காதலிக்கும்பட்சத்தில், அவளும் உங்களை விரும்புகிறாளா என்பதை அறிந்து, அதன்பின் மேற்கொண்டு அதுபற்றி பேசவும்.

 * உங்களுக்கும், தோழிக்கும் திருமணம் ஆன நிலையில், தோழியின் கணவர் அனுமதிக்கும்பட்சத்தில் மட்டுமே உங்கள் நட்பை தொடரலாம். அதுவும், ஒரு குடும்ப நண்பராக!

 * திருமணத்திற்கு பிறகு, நேரில் பார்த்தால் மட்டும் நட்பை புதுப்பித்துக் கொள்வோம். மற்ற சூழ்நிலைகளில் வேண்டாம் என்று உங்கள் தோழி கூறினால், அதை பெருந்தன்மையோடு ஏற்று செயல்படுத்துங்கள். எங்கள் நட்பை எப்படி கொச்சைப்படுத்தலாம்? என்று கேட்டு, உங்கள் தோழி வாழ்க்கையை பாழாக்கிவிடாதீர்கள்.

 * கடைசியாக ஒன்று, உங்கள் தோழியையும் உங்கள் சகோதரிபோல் பாவித்து பழகுங்கள். அப்போது, உங்கள் நட்புக்கு நிச்சயம் களங்கம் வராது என்று உத்தரவாதம் கொடுக்கலாம்.

 

 அடுத்து காதலி...


 இன்று காதலிக்காதவர்களே கிடையாது. ஆணும், பெண்ணும் கண்களால் மோதிக்கொண்டாலே அங்கே யாராவது ஒருவரிடத்தில் காதல் தீ பற்றிக்கொண்டு விடுகிறது.

 இன்னொரு மறுக்க முடியாத உண்மை; டைம் பாஸாக வேண்டும் என்பதற்காகவும் சிலர் காதலிக்கிறார்கள். இருவருக்கும் திருமணம் ஆகும்வரை பேசுவோம், பழகுவோம், ஊர் சுற்றுவோம். திருமணம் ஆகிவிட்டால் நீ யாரோ, நான் யாரோ என்று போய்விடுவோம் என்று தங்களுக்குள் அக்ரிமென்டே போட்டுக்கொள்கிறார்கள்.


 உங்கள் காதலி உண்மையான காதலியாக இருந்தால், அவளிடம் எப்படி பழகலாம்?

 * அவள் உங்களின் வருங்கால மனைவி என்பது உறுதியாக தெரிந்தால் மாத்திரமே காதலியுங்கள். இல்லையென்றால், பழகியவை எல்லாம் கனவென்று நினைத்து ஒதுங்கிவிடுங்கள். இதில் தப்பே இல்லை. காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியில் கழற்றிவிட்டு ஒரு பெண்ணின் சாபத்தை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள்.

 * உங்கள் காதல் சைவக் காதலாக இருக்கட்டும். தவறான எண்ணத்தில் கை வைத்து விடாதீர்கள். நாளை, நீங்கள் கணவன்-மனைவி ஆகும்போது, "ச்ச்ச்சீசீ! அப்படியா நடந்து கொண்டோம்?" என்று அருவருப்பாக யோசிக்க வேண்டியது இருக்கும்.

 * காதலியுடன் மனம் விட்டு பேசுங்கள். எதிர்காலம் பற்றி திட்டமிடுங்கள். முறையாக, இருவர் வீட்டிலும் காதலுக்கு ஒப்புதல் வாங்கிக்கொள்ளுங்கள். காலாகாலத்தில் திருமணம் செய்துகொள்ளுங்கள்.

 * மொத்தத்தில் உங்களுக்காக அவள் என்றும், அவளுக்காகவே நீங்கள் என்றும் எப்போதும் நினைத்திருங்கள்.


 அடுத்ததாக மனைவி...


  பிறந்த சொந்தங்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு நம்மோடு, நமக்காக வாழ வருபவள். அவளை மகாலெட்சுமி என்றே போற்றுங்கள். அதில் தவறே இல்லை.

 உங்களில் ஒருத்தி, உங்களுக்காக ஒருத்தியாக இருக்கும் அவளிடம் எப்படி பழகுகிறோம் என்பது முக்கியமல்ல. எல்லா விஷயங்களிலும் எந்த அளவுக்கு அவளை சந்தோஷமாக வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
 அதை புரிந்துகொண்டு நீங்கள் செயல்பட்டால் அவள் உங்களுக்கு நல்ல மனைவிதான். நீங்களும் அவளுக்கு நல்ல கணவன்தான்!

காதலுக்கு நிஜ அழகு மட்டும் போதுமே

பார்வை நிலை முடிந்து இயல்பாக பேசும் நிலையில் இருப்பதையே நிறைய பேர் காதல் என எண்ணிக் கொள்கிறார்கள். அதன்பிறகு அதிகப் பிரசங்கித்தனமாக ஏதாவது செய்யும் போதுதான் ஏடாகூடமாகிவிடுகிறது.

முதலில் ஆண்கள் பெண்களை எப்படி கவர்வது என்று பார்ப்போம்.


பார்வை நிலையில் வெற்றி அடைந்தாகிவிட்ட நிலையில் இனி புற அழகிற்கு என அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.
இந்த நிலையில் ஒரு சிலர் கதாநாயகன் மாதிரி தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டும் என நினைத்து நடை, உடை, பாவனைகளை மாற்றுவார்கள். இதனை பெண்கள் எவரும் விரும்புவதில்லை என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் எடுத்துச் சொல்லியிருக்கின்றன.

தான் விரும்பும் நபர் ஓர் இடத்திற்குச் செல்லும்போது, அவரை பல்வேறு பெண்கள் ஆசையாக, ஆர்வமாக பார்ப்பது பொறாமையைத் தூண்டுவதுடன் எரிச்சலையும் கொடுத்துவிடும். அதனால் இயல்பாகவே இருங்கள்.
உங்கள் புறத்தோற்றம் பிடித்துப்போன பிறகு பேச்சு நிலைக்கு வந்திருக்கிறீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

அதனால் அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இனி கிடையாது. அதற்காக இத்தனை மிடுக்காக செய்துவந்த உடை அலங்காரம், உடல் தூய்மை என அனைத்தையும் விட்டுவிடலாம் என அர்த்தம் இல்லை.
தன்னிடம் ஓர் ஆண் பேசும்பொழுது வேறு எந்த தொந்தரவும் வருவதை பெண் விரும்பமாட்டாள். அதேநேரம் அவளது கண்களுக்கு நீங்கள் மிக அழகாகவே தெரிவீர்கள்.

இதற்கு ஓர் அழகான உதாரணம்

சுதா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எத்தனையோ அழகான பையன்கள் அவளுடன் பேசுவதற்கு போட்டி போட்டார்கள். அவள் அனைவரையும் ஒரு புன்னகையுடன் ஒதுக்கிவிட்டாள்.
வழக்கமாய் அவள் வந்து செல்லும் பஸ்ஸில் கண்டக்டர் மிகவும் சுறுசுறுப்பாக, நாகரீகமாக பழகுவது அவளைக் கவர்ந்து இழுத்தது. அவர் அதிகமாகப் படிக்காதவர், மிகவும் கருப்பான நிறம் கொண்டவர். சுதாவை விட தாழ்ந்த ஜாதி என எதுவுமே அவளை பாதிக்கவே இல்லை.
சுதாவே அவளது காதலை அவனிடம் சொன்னாள். இன்று அவர்கள் இருவரும் ஒரு வெற்றிகரமான தம்பதியராக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த சுதாவைப் போன்றுதான் கிட்டத்தட்ட எல்லா பெண்களும் தனது காதலன் நல்லவனாக, வல்லவனாக, நகாரீகமானவனாக, உழைக்கக் கூடியவனாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான் அதிக முன்னுரிமை கொடுக்கிறார்களே தவிர, அழகுக்கு அல்ல.
சினிமா நட்சத்திரங்களைப் போன்று தலை அலங்காரம், உடை அலங்காரம் செய்வது எல்லாம் நகைச்சுவையாகவே தெரியுமே தவிர, மனதினைக் கவராது. அதனால் முதலில் எப்படி இருந்தீர்களோ அப்படியே எப்போதும் இயல்பாக இருங்கள். தேவையின்றி நீங்களும் குழம்பி, பெண்களையும் குழப்பாதீர்கள

 பெண்களை எளிதாக கவரும் ஆண்களின் குணங்கள்!

ஒரு பெண்ணை அடைவது என்பது மிகவும் சுலபமான விடயம் அல்ல என்று கூறுபவர்களும் உண்டு. அதே சமயத்தில், ஒரு பெண்ணை நான் விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன் என்று முரண்பாடாக கூறுபவர்களும் உண்டு.
தான் விரும்பிய பெண்களை அடையும் ஆண்களுக்கு என்று சில விஷேசக் குணங்கள்இருப்பதாக காம சூத்திரம் தொகுத்துக் கூறுகிறது.
அதாவாது,
பெண்களிடம் மிக இயல்பாக நடந்து கொள்பவன்.
பெண்களை சந்தோஷப்படுத்தும் செயல்களை செய்பவன்.
விருந்து, விஷேசங்களில் மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்பவன்.
அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்.
உல்லாசமாக இருப்பதில் அதிக அக்கறை காட்டுகிறவன்.
அதிக துணிச்சல் உடையவன்.
இளம் பருவத்தில் தோழனாக உள்ளவன்.
அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்.
காம சாஸ்திரம் நன்கு கற்றவன்.
தாராள மனப்பான்மை உடையவன்.
அடிக்கடி பெண்கள் பார்வையில்தெரியும்படி இருப்பவன், நடந்து கொள்பவன்.
ஏராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்.
ரகசியத்தை அறிந்தவன்.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்கள், பெண்களின் மனதில் வெகுவாக இடம் பிடிக்கிறார்கள் என்பது சத்தியமான உண்மையாகும்.

சாமுத்திரிகா லட்சணம்

1. தலை - ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம் உண்டு. பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு உண்டு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம்.

2. நெற்றி - அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. மிகச் சிறுத்திருப்பின் மூடனாவான். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண்டாகும். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.

3. கண் - ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.

4. மூக்கு - உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.

5. வாய் - அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்..

6. உதடு - உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்கும்.

7. கழுத்து - ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பின் அதிர்ஷடமாம். மிக உயரமாகவோ, மிகக் குட்டையாகவோ, நரம்புகள் தெரியும்படியோ இருந்தால் வறுமையாம்.

8. தோள் - தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம் முடியாது.

9. நாக்கு - நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடமாம். கருத்தும், வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரமாம்.

10. பல் - மெல்லிய ஒடுக்கமான பற்களை உடையவர்கள் கல்விமான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதிகம் வரும். வரிசை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரமாம்..

11. காது - காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.

12. கைகள் - நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான்.

13.மணிக்கட்டு - மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரமாம்.

14. விரல்கள் - கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால் அற்ப ஆயுளாம். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான்.

15. மார்பு - ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் முலைக்காம்புகள் எடுப்பாகவும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுளாம். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் காம இச்சை அதிகம் இருக்கும்..

16. வயிறு - பானை போன்ற உருண்டையான வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண்டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற்றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம்.

17.முதுகு - சமமான முதுகைப் பெற்றவர்கள் எதிலும் வெற்றி பெறுவர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால் தரித்திரமாகும்.

18. கால்கள் - கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.

19. கால்பாதம் - கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்..

மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க....


* நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களைமனைவியுடன்மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள்.

* முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாகஇருந்து விடா தீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்தவிஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும்ஒன்றாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில்மனைவிஇருக்கிறாள்என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள்.

* எடுத்துக்கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரி யாமல்கடலை' போட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைக்கூடபலமணிநேரம் பேசு வார்கள். அதே போன்று நீங்களும்பேசுங்கள். அதற்காக, ஒன்றும்இல்லாத விஷயத்தை பேசுங்கள்என்று அர்த்தம் இல்லை. உங்கள்குடும்பத்துக்குதேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்தவிவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.

* பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி அந்த பூக்களை உங்கள்அன்பானமனைவிக்குவாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.

* சம்பளம் பெறுவோர், சம்பளம் வாங்கிய நாள் அன்று மல்லிகைப்பூவுடன் மனைவிக்கு பிடித்தஸ்வீட்டையும்வாங்கிக்கொண்டு கொடுத்தால் அவர்களதுமனைவி அடை யும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.

* உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினைத்திருங்கள். ஒருகாதலன் காதலியிடம் எப்படி அன்பாகநடந்துகொள்வானோ, அதே போன்றுநடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.

* உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன்' என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள்இப்படிகேட்டமாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள்.

* மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்தநேரம், அவள்மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலேபொழியும். மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம்அன்பாகஇருப்பாள். நீங்கள் அவளிடம் ஒரு காதலனாய் பழகும்போது அவளும் உங்கள் காதலியாய் மாறிவிடுவாள்! அதனால் காதலியுங்கள், மனைவியை!

ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்

அழகுபடுத்திக் கொள்வதும், அழகாகத் தோற்றமளிக்க வேண்டுமென்று எண்ணுவதும் ஆண், பெண் இருபாலருக்கும் உரியவை. ஆயினும், நம் நாட்டைப் பொறுத்தவரை, அழகுபடுத்திக்கொள்வது என்பது பொதுவாக பெண்கள் சமாசாரமாக உள்ளது. 'இல்லை எங்களுக்கும் தேவை' என்று கேட்கிற ஆணா நீங்கள்..? மேலும் படியுங்கள்!

சிகை அழகு

கருமையான தலைமுடியே முக அழகிற்குக் காரணமாகும். முடிந்தவரை நரை அதிகமாகும் முன்னரே கடைக்குச் சென்று ஆண்களுக்குரிய 'டை' வாங்கி நரையை மறைத்துக் கொள்ளுங்கள்!

உச்சந்தலையில் முடி குறைய ஆரம்பித்தால், நீங்கள் கூடிய விரைவில் வழுக்கையாவது உறுதி! மனம் தளராதீர்கள். இதோ சில குறிப்புகள்!

உங்கள் தலைமுடியைக் குட்டையாக வெட்டிக் கொள்ளுங்கள். சீப்பினைப் பயன்படுத்தித் தலையைப் படிய வாரிக்கொள்ளுதலைத் தவிர்த்து, உங்கள் வயதான தோற்றத்தைத் தள்ளிப் போடுங்கள். மேலும், வழுக்கை ஏற்படும் போது மூக்கு, காது மற்றும் தலையின் பின்புறம் உள்ள முடிகளை சீராக வெட்டி அல்லது நீக்கி உங்கள் தோற்றத்தைச் 'சிக்'கென்று வைத்துக் கொள்ளுங்கள்.

சரும பளபளப்பு

ஆண்கள் தங்களுடைய சருமத்தைப் பாதுகாப்பது மிக அவசியமாகும். அதுவும் தினந்தோறும் முறையாக செய்ய வேண்டும்.

முதலில் சருமத்தைக் குளிர்ந்த நீரினால் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் கடைகளில் கிடைக்கும் சரும வறட்சியைக் குறைக்கும் க்ரீம்களையும், சூரிய வெப்ப தாக்குதலில் இருந்து காக்கும் க்ரீம்களையும் தடவிக் கொள்ளுங்கள். சில நாட்களிலேயே உங்கள் சருமம் வழவழப்பாகவும் பளபளப்பாகவும் ஆவதை உணர்வீர்கள்.

சருமம் மென்மையாவதால் முகச்சவரம் செய்து கொள்வது எளிமையாகி விடும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இந்த பளபளப்பு, வழவழப்பு என்பதெல்லாம் முகத்தோடு நின்று விடக்கூடாது. கைகள் கால்கள் என்று உடல் முழுவதுமான பராமரிப்பாக இருக்க வேண்டும்.

மேலும் பெண்கள் செய்வது போல வாரத்திற்கு ஒரு முறை, கடைகளில் கிடைக்கும் ப்யூமைஸ் (pumice stone) கல்லினைப் பயன்படுத்தி உடலின் சொரசொரப்பான பகுதிகளை வழவழப்பாக்கிக் கொள்ளலாம்.

ஆள் பாதி.. ஆடை பாதி

நீங்கள் உங்கள் உடைகளை அயர்ன் செய்ய சோம்பல் படுபவரா? கவலை வேண்டாம். எளிய வழி! துணிகளைத் துவைத்தவுடனேயே தாமதிக்காமல் அவற்றை நன்றாக உதறிக் காய வைத்தால் சுருக்கம் ஏற்படாது. அயர்னும் தேவையில்லை.

தட்பவெப்ப நிலைக்கேற்ப ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள். வெயில் காலங்களில் வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணியுங்கள். இவ்வகை ஆடைகள் குறைவான வெப்பத்தையே உள்வாங்கும். எனவே வியர்வையினால் ஏற்படும் கறைகள் குறைந்து விடும். மேலும் முழுமையாக வியர்வைக் கறைகள் தொலைய, அக்குளில் இருக்கும் முடிகளை நீக்கி விடுங்கள். இதன் மூலம் துர்நாற்றம் குறைந்து நிம்மதியாக இருப்பீர்கள்.

முகச்சவரத்திற்கு..

முகச்சவரம் செய்யும் உங்கள் ரேசர் நீண்ட நாட்கள் செயல்பட இதோ ஒரு எளிய வழி.

கடைகளில் கிடைக்கும் மினரல் ஆயிலையும், ரப்பிங் ஆல்கஹாலையும் (Rubbing alcohol) வாங்கிக் கொள்ளுங்கள். முகச்சவரம் முடித்த பின் ரேசரைக் காய வையுங்கள். பின் அதை மினரல் ஆயிலில் மூழ்க விடுங்கள். சிறிது நேரம் கழித்து ரேசரை வெளியே எடுத்து, ரப்பிங் ஆல்கஹாலால் எண்ணெயைத் துடைத்து எடுங்கள். மின்னும் உங்கள் ரேசர் நீண்டகாலம் உழைக்கும்!

நீங்க அழகா தெரியனும்னா உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ் ரொம்ப முக்கியம்.

பொதுவாவே  பெண்கள் தான் டிரஸ் செலக்ட் பண்ண ரொம்ப நேரம் எடுத்துக்கறாங்க ... 

ஆண்களுக்கென்ன ஒரு ஜீன்ஸ் பேண்ட்டும் ஒரு டி ஷர்ட்டும் எடுத்தா போதும்னு சொல்லுவாங்க... ஆனா அப்படி இல்லீங்க ஆண்களுக்கும் டிரஸ் செலக்ட் பண்றதில ரொம்ப கஷ்டம் இருக்கு... 
வாங்க அது என்ன கஷ்டம் அத எப்படி சுலபமாக்கலாம்னு பாக்கலாம்...
பொதுவாவே எல்லா கடைகளிலும் ப்ரீ சைசுனு ஒன்னு வெச்சுருப்பாங்க .. ஆனா அதெல்லாம் நம்ம சத்யராஜ் உயரத்துக்கோ அல்லது அவர் மகன் சிபி உயரத்துக்கோ தாங்க இருக்கும்....

அப்ப செந்தில் சார் மாதிரி (உயரத்திலும்  உடம்பிலும் )இருக்கறவங்க எல்லாம் எத போடறது 
கொஞ்சம் குள்ளமா இருக்கற நீங்க ஜீன்ஸ் பேன்ட் போடும் போது அதோட உயரம் உங்க காலணியோட(அதாங்க ஷூ ) நுனி வரைக்கும் இருக்கற மாதிரி போடுங்க அப்பதான் உயரமா தெரிய  முடியும்... 
குள்ளமா இருக்கறவங்க எந்த கலர்ல பேன்ட் போடறீங்களோ அதே கலர்ல ஷூஸ் போடுங்க ... அப்ப கொஞ்சம் உயரமா தெரியலாம்....
உயரமா இருக்கறவுங்க தொள தொளனு இருக்குமே(அதாங்க கார்கோ ) அந்த பேன்ட் போடுங்க அப்பத்தான் உயரம்  குறைவா தெரிவீங்க....

ஷார்ட் ஸ்லீவ்ஸ் போடுங்க அதனால உயரம் கொஞ்சம் குறைவா தெரியும்....

 
நீங்க போடற காலணியும் உங்க டிரஸ்  கலர்லையே போடாதீங்க வேற கலர்ல போடுங்க ,, அப்பத்தான் உயரம் குறைவா தெரியும்....
முதலாவது .....

நீங்க எந்த டிரஸ் போடறதா இருந்தாலும் உங்க உடம்புக்கு தகுந்த மாதிரி போடுங்க... ரொம்ப லூசா , இல்லனா ரொம்ப இறக்கமா போடாதீங்க..
நீங்க போடற டிரஸ் உங்க உடம்ப ஒட்டின மாதிரி அதே நேரம் இறுக்காத மாதிரி போடுங்க ..
இறுக்கமா டிரஸ் போடனும்னா கரக்டான உடலமைப்பு வேணும் (அதாங்க ஸ்ட்ரக்ச்சர்) வேணும்....

அப்பதான் ஒரு சரியான லுக் குடுக்கும் .....


 
இரண்டாவது ....
ரொம்ப சிம்பிளா டிரஸ் போடுங்க.... உங்க டிரஸ்ல மூணு கலருக்கு மேல இருக்காம பாத்துக்கோங்க .. இல்லனா அது உங்கள பேண்டு வாத்தியக்காரன் மாதிரிக்காட்டும் ....

மூன்றாவது..

ரொம்ப சிம்பிளா அதே நேரம் ஸ்டைல்லாவும் தெரியனும்னா  என்னோட சாய்ஸ் ப்ளாக் ஜீன்ஸ் தாங்க .....கோடுகள் போட்ட மாதிரி டாப்ஸ் போட்டீங்கின்னா அழகா தெரியும் ...
நான்காவது...

இப்ப ஆபீஸ் போறவங்களா இருந்தா வாரத்தின் ஐந்து நாட்கள்ல , நான்கு நாட்கள் கேசுவல்ஸ் தான் போடணும்....
கேசுவல்ஸ் போட்டு போட்டு போர் அடிச்சு போயிருக்கும்.. வேற ட்ரெஸ்ஸும் போட முடியாது.. அப்ப நீங்க என்ன பண்ணனும்னா கேசுவல்ஸ்லையே நெறைய வெரைட்டி கடைகள்ள கெடைக்குது.. 
அதாவது காலர்ல மட்டும் டிசைன் பண்ணின மாதிரி கழுத்துகிட்ட மட்டும் டிசைன் பண்ணின மாதிரி கிடைக்கும்.. அத ட்ரை பண்ணுங்க.. 

 
பொதுவா கலர் குறைவா இருக்கறவங்க எப்போதும் டார்க் கலரா போடாதீங்க.. ரொம்ப லைட் கலரும் போடதீங்க... இடைப்பட்ட மாதிரி போட்டீங்கின்னா கலர் குறைவா தெரிய மாட்டீங்க ....
ஐந்தாவது ....

இப்ப இருக்கற யூத்ஸ் அதிகமா காலர் இல்லாத டிரஸ் தான் அதிகமா உபயோகிக்கறாங்க ..

ஆனா காலர் இல்லாத டிரஸ் விட காலர் வெச்ச ஷர்ட் தாங்க உங்கள குண்டா அதாவது கொஞ்சம் அழகா கட்டும்.. சோ ஒல்லியா இருக்கறவங்க காலர் உள்ள டிரஸ் ட்ரை பண்ணுங்க ...
ஆறாவது ...

நீங்க எந்த டிரஸ் போடறதா இருந்தாலும் கண்டிப்பா இன்னர் (அதாங்க பனியன்)போடுங்க ....

இன்னர் போடறதால ரெண்டு பயன் இருக்குங்க ...

ஒண்ணு கரக்டான ஷேப் கொடுக்கும்...ரெண்டாவது  வியர்வை, உடம்பில உண்டாகுற எண்ணெய் இதெல்லாத்தையும் உறிஞ்சிக்கும் .. நீங்க எப்போதும் புத்துணர்ச்சியா இருக்கற பீலிங் குடுக்கும்...
ஏழாவது ....

 
பொதுவா ஜீன்ஸ் போடும் போது வி நெக், யு நெக், ஷர்ட்ஸ் போடாதீங்க  அது அவ்வளவு எடுப்பா இருக்காது...


எட்டாவது....

குண்டா இருக்கறவங்க லூஸ் ஷர்ட்ஸ் போடுங்க.. இல்லன்னா  கருப்பு நிறத்துல டிரஸ் போடுங்க ... இது கொஞ்சம் உங்கள ஒல்லியா காட்டும்...

ஒல்லியா இருக்கறவுங்க ஜீன்ஸ் ஷர்ட்ஸ் உபயோகிங்க அது உங்கள குண்டா காட்டும்...
ஒன்பதாவது...

உங்க டிரஸ்கு ஏத்த ஹேர் ஸ்டைல்லும் முக்கியம்...  நீளமா முடி வளத்தரதுதான் இப்ப பேஷன் ..
ஆனா அது உங்களுக்கு பொருத்தமா இருக்கானு பாக்கணும்... பொருத்தம் இல்லைனா தயவு செஞ்சு அந்த மாதிரி ஹேர் ஸ்டைல் அவாய்ட்  பண்ணிடுங்க.....


எப்போதும் ஒரே மாதிரி வகிடு எடுத்து சீவாதீங்க... தூக்கின மாதிரியும் சீவாதீங்க.....

ஒரே மாதிரி வகிடு எடுத்து சீவினா சீக்கிரம் முடி கொட்டிடும்... அப்பறம் நான் அடுத்த போஸ்ட்ல சீக்ரமா முடி வளர்ப்பது எப்படின்னு போஸ்ட் போட வேண்டியது வரும்... அந்த நெலைமைக்கு என்ன ஆளாக்கிடாதீங்க பாஸு.... 
வகிடு மாத்தி மாத்தி எடுங்க அப்பதான் முடி கொட்டாது.. பொண்ணுகள பாக்கும் போதும் கோதி விட்டு ஸ்டைல் பண்றதுக்கும்  வசதியா இருக்கும்....
பத்தாவது..

இது ரொம்ப முக்கியம்... உடலமைப்பு (ஸ்ட்ரக்ச்சர் ) .... நீங்க எந்த டிரஸ் போடறதா இருந்தாலும் உங்களுக்கு பொருந்தினாதான் அழகே... அப்படி பொருந்துனும்னா கரக்டான உடலமைப்பு வேணும்...