பற்கள்… பரவசத் தகவல்கள்…


மனிதர்களுக்கு இயற்கையின் அணிகலன், புன்னகை. `பளீர்’ பற்கள்தான் புன்னகைக்கு அழகு. அது மட்டுமல்ல, உணவு பற்களால் நன்கு அரைபடும்போதுதான் செரிமானம் எளிதாகிறது, பற்களின்றி வார்த்தைகளும் கம்பீரம் பெறாது.
ஆக, முகத்தின் `விசிட்டிங் கார்டான’ பற்களை பாதுகாப்பதில் நாம் கவனம் வைக்க வேண்டியது அவசியம்.
பால் பற்களும், நிரந்தர பற்களும்
நீள்வட்ட வடிவ பல் மொட்டுகள், கருவின் 6 முதல் 8 வாரங்களிலேயே உருவாகி விடுகின்றன. நிரந்தர பல் மொட்டுகள் 22-வது வாரத்தில் உருவாகின்றன. பல், கண்ணுக்குத் தெரியுமாறு முளைக்கத் தொடங்குவது வெளிபாடு எனப்படு கிறது. ஆறு மாதம் முதல் 1 வருடத்தில் பால் பற்கள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மூன்று வயதில் அவை முழுமையாக வளர்ந்து விடுகின் றன. நிரந்தர பற்கள் சரியான இடங்களில் வளர பால் பற்கள் உதவுகின்றன. ஆறு வயதில் இருந்து அவை விழத் தொடங்கும்போது அவற்றின் வேர்கள் மறைய ஆரம்பிக்கின்றன. முதலாவது கடைவாய் பற்களே முதலில் வளரும் நிரந்தர பற்களாகும்.
பல் சுத்தம்
தினமும் இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். ஒவ்வொரு உணவு வேளைக்கு பின்னும் பல் துலக்கினால் இன்னும் நல்லது. பற்களுக்கு இடையில் உள்ள காரையை `டூத்பிரஷால்’ நீக்க முடியாது. எனவே பற்களுக்கு இடையே கவனமாக சுத்தம் செய்வது முக்கிய மானது. `புளோரைடு மவுத்வாஷ்’ செய்தால் பற்சிதைவு ஏற்படாமல் தடுக்கலாம். பல் மருத்துவரின் உதவியால் அவ்வப்போது பற்காரையை நீக்கலாம்.
அரிசியும், பற்சிதைவும்
மனிதன் நெற்பயிரை விளைவிக்கத் தொடங்கியபின்பு தான் பற்சிதைவு அதிகமாகி யிருக்கிறது என்று தொல்பொருள் ஆய்வுகளின் மூலம் தெரியவந்திருக்கிறது. கருமபு உற்பத்தி தொடங்கியதும் பற்சிதைவு மேலும் அதிகமாகியிருக்கிறது.உங்களுக்குத் தெரிமா?
* 2000 குழந்தைகளில் ஒன்று, பிறக்கும்போதே ஒன்றிரண்டு பற்களுடன் பிறக்கிறது.
* 35 வயதுக்கு பிறகு பற்சிதைவு வேகம் குறைகிறது.
* பிறக்கும் குழந்தைக்கு ஈறுக்குக் கீழே 52 பல் மொட்டுகள் இருக்கின்றன. அவற்றிலிருந்து 20 பால் பற்களும், 32 நிரந்தர பற்களும் தோன்றுகின்றன.
* மரணத்துக்கு பின்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு உதிராமல் இருக்ககூடியது பல்.
* பாலூட்டிகளுக்கு இரண்டு `செட்’ பற்கள் முளைக்கின்றன.
* நவீன பல் மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படுபவர் `பியரே பாச்சார்டு’. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு மருத்துவரான இவர், முதல்முறையாக பல் மருத்துவ விஷயங்களை முழுமையாக அளித்தார்.
* உயிரின வகைகளுக்கு ஏற்ப பல் அமைப்பு மாறுபடுகிறது. தாவர உண்ணிகளுக்குக் கடைவாய் பற்கள் அதிகமாகவும், விலங்குண்ணிகளுக்கு கோரை பற்கள் அதிகமாகவும் இருக்கின்றன.
*மனிதர்களுக்குக் குழந்தை பருவத்தில் 20 பால் பற்களும், பெரியவர்களாகும் போது 32 நிரந்தர பற்களும் முளைக்கின்றன.

0 Response to "பற்கள்… பரவசத் தகவல்கள்…"

Post a Comment