செல்போன்-கம்ப்யூட்டரால் கழுத்து வலி பாதிப்பைத் தடுக்க எளிய வழிமுறைகள்


கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும். கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும். உடலுக்கும், தலைக்கும் ரத்தம் மற்றும் நரம்புகள் பயணம் செய்கின்றன. கழுத்தின் மையமாக தண்டுவட எலும்புகள் உள்ளன.
இதில் 7 எலும்புகள் உள்ளன. அந்த எலும்பு சட்டத்தை சுற்றி தசைகள், தசைநார்களும் உறுதி கொடுக்கின்றன. இந்த கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன என்கிறார் பிரபல வலி நீக்கியல் நிபுணர் டாக்டர் ஜி.கே.குமார். அவர் கூறியதாவது:- மேலும் உணவுக் குழாய், மூச்சுக்குழாய் உள்ளன. மூளைக்கும், இருதயத்திற்கும் இடையேயான ரத்த ஓட்டம் கழுத்தின் வழியேதான் நிகழ்கிறது.
முதுமைப் பருவத்தில் கழுத்து எலும்புகளின் இணைப்புகளில் ஏற்படும் தேய்மானத்தைத்த செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் என்று அழைக்கின்றனர். இதை தமிழில் தோள்பட்டை வாதம் என்கின்றனர். இது பொதுவாக நடுத்தர வயதுடையோரிடமும், முதியோரிடமும் குறிப்பாக ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வோரிடமும் காணப்படுகிறது.
குடல், வயிறு இவற்றின் மூலப் பகுதிகளில் உஷ்ணம் அதிகமானால் வயிற்றுப் பகுதியில் உள்ள அபான வாயுவின் சுழற்சி காரணமாக குடல் மேலும் உஷ்ணப் பட்டு உட லில் உள்ள நீரானது அபான வாயுவால் மேல்நோக்கி தள்ளப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நீர் தலைப் பகுதிக்கு வந்து கோர்த்துக் கொள்ளும். பின்பு கழுத்து நரம்பு வழியாக முதுகுப் பக்கம் (பின்பகுதி) நீர் இறங்கும். இவ்வாறு இறங்கும் நீரானது கழுத்துப் பகுதிக்கு வரும்போது அதன் தன்மை மாறி பசைபோல கடினமாகிறது. பின்பு அது இறுகித் தடித்து கடினமானதுபோல் ஆகிவிடும். இதுதான் தோள்பட்டை வாதம்.


அறிகுறிகள்:
கழுத்துப் பகுதியில் வலி ஏற்படும்.கைகள் மரத்துப் போகும். சுண்டு விரல் செயலிழந்து போகும். மன எரிச்சல் உண்டாகும். தூக்கமின்மை ஏற்படும். எப்போதும் கோபம் கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
கண் எரிச்சல் உண்டாகும். எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும். படிக்கும் போது கழுத்து வலி உண்டாகும். மேலும் குனியும்போதும், நிற்கும்போதும் தலைசுற்றி கண்ணில் மின்னல்போல் தோன்றி உடல் அதிரும். நரம்புகள் இறுகும். ஒருசிலருக்கு நடக்கும்போது தலை சுற்றல் உண்டாகும். கழுத்து கடுத்து, தடித்து காணப்படும். மன நிம்மதியின்றி காணப்படுவார்கள்.
பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் உண்டாகும். வாத உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து இறுகி திருப்ப முடியாத நிலை ஏற்படும். கப உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து பகுதி தடித்து உப்புநீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாக தடித்து காணப்படும்.அதிக வியர்வை உண்டாகும். கழுத்துப் பகுதியில் எரிச்சல் தோன்றும். ஒருசிலருக்கு இடது பக்கமாக கழுத்துப் பகுதியிலிருந்து நீர் கீழிறங்கி தோள் பட்டையில் வலியை உண்டாக்கும். இது நெஞ்சு வலியைப் போன்று தோன்றும். நெஞ்சு வலிக்கும் தோள்பட்டை வலிக் கும் வித்தியாசம் கண்டறிவது கடினம். தொடர்ந்து பல நாட்களாக கழுத்து வலி காணப்படும். அந்த வலியானது தோள் வரை பரவும், கழுத்துப் பகுதியில் கை பட்டவுடன் வலி தோன்றும்.


காரணங்கள்:
மலச்சிக்கல், குடலில் வாய்வுக் கோளாறு, மூலச்சூடு, தலையில் நீர் கோர்த்தல், மனஅழுத்தம் போன்ற காரணங்களால் தோள்பட்டை வலி உண்டாகிறது என்கிறார் வலி நீக்கியல் நிபுணர் டாக்டர் ஜி.கே.குமார்.


கம்ப்யூட்டர் வேலை:

கழுத்து வலி, பெரும்பாலோருக்கு வரும். அதிலும் கம்ப்யூட்டரே கதி என்று இருக்கும் இளைய வயதினருக்கு அடிக்கடி வரும். அதற்கு ஏற்ப பழக்கத்தை மாற்றினால் கழுத்து வலி போய்விடும். ஆனால் சிலவகை கழுத்து வலிகள் இருக்கின்றன. கீழ்க்கண்ட காரணங்களில் கழுத்துவலி வந்தால் உஷாராகி விடவேண்டும்.
அதிக காய்ச்சல், காரணமே இல்லாமல் எடை குறைவது, தலைசுற்றல்-மயக்கம், கைநடுக்கம் போன்ற நரம்புகள் கோளாறுகள், கழுத்துவலி அதிகமாக இருக்கும்போது, கழுத்து இறுக்கமாக இருக்கும்போது. இப்படிப்பட்ட காரணங்களினால் கழுத்துவலி வந்தால் தைலம் தடவிக் கொண்டிருக்கக் கூடாது. டாக்டரிடம் போய்விட வேண்டும்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், டீன்-ஏஜ் வயதினரும் அதிக நேரம் கம்ப்ïட்டர் முன் அமர்ந்திருப்பதால், கழுத்து வலிக்கு ஆளாகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவிலும் அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவிலும் சுமார் ஆயிரத்து 73 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி அதிக நேரம் கம்ப்ïட்டரை பயன்படுத்துவதால் இந்த பாதிப்புகள் ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


தடுக்கும் முறை:

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது தாகம் ஏற்பட்டால் குளிரூட்டப்பட்ட நீரோ, குளிர்பானங்களோ அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது.
வாகனங்களை மிதமான வேத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை சிறு சிறு தூரங்களுக்கு நடந்து செல்வது நல்லது. ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.


உணவு:
பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளை குறைத்து எளிதில் ஜீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது. கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கடுமையான வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் (அல்லது) ஐஸ் ஒத்தடம் தரவும். மனதளவில் இறுக்கமின்றி `ரிலாக்ஸாக' இருக்கவும். நேரான கோணத்தில் அமரவும். குறிப்பாக அலுவலகத்தில் மேஜைப்பணி புரியும்போது, கம்ப்யூட்டர் முன் அமரும்போது...
படிக்கும்போது, படிக்கிற பக்கத்தை உங்கள் நேர் எதிரில் வைத்துக் கொள்ளவும். மேஜையில் அமர்ந்து பணி ஆற்றும் போது நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையைத் தவிர்க்கவும். ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும். இது தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்கும். படுக்கும்போது கழுத்துக்கு கீழே ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகள் அல்லது அதிக உயரமான தலையணை வைப்பதை தவிர்க்கவும். வயிறு தரையில் படும்படி குப்புறப் படுக்காதீர்கள்.
இந்த நிலை கழுத்தை முறுக்கி விடும். ஒரு குறிப்பிட்ட உயரத்தை பார்ப்பதில் தொடர்ச்சியாக, நெடுநேரம் ஈடுபடாதீர்கள். அதேபோல் அதிக கனம் தூக்குவதில் அதிக நேரம் ஈடுபடாமல் இருக்கவும். நெடுநேரம் தொடரும் `டிரைவிங்'கைத் தவிர்க்கவும். அடிக்கடி ஓய்வுக்காக வண்டியை நிறுத்தவும்.என்கிறார் சென்னை வடபழனி ஆகாஷ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை சேர்ந்த வலி நீக்கியல் நிபுணர் டாக்டர் ஜி.கே.குமார்.செல்போன்களால்...
எந்நேரமும் செல் போனை பயன் படுத்துபவர்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.அதிக நேரம் செல்போனில் பேசுவதால் கழுத்து, கை, காது போன்றவற்றில் வலி ஏற்படுகிறது. சிலர் பேசும் போது காதுக்கும், தோள்பட்டைக்கும் இடையில் செல்போனை வைத்து அழுத்திக்கொண்டு வேறு ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுவர்.
இவ்வாறு தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் கழுத்தில் வலி ஏற்படுவதுடன் விரைவிலேயே கழுத்தில் உள்ள எலும்புகள் பாதிக்கப்பட்டு வளைந்து விடும். அதேபோல் தொடர்ந்து கையை ஒரே நிலையில் வைத்திருப்பதால் ரத்த ஓட்டம் தடைபட்டு கையின் இயக்கம் பாதிக்கப்படுகிறது.
உடற்பயிற்சிகள்:
நாம் பழக்கத்தின் காரணமாகவே நம் கழுத்துக்களை தவறான முறைகளில் திருப்புகிறோம். இதனால் கழுத்துக்கு இடைïறே நம் தசைகள் உறுதியானவையாக இல்லை என்றாலோ நெகிழ்வுத் தன்மை குறைந்தவை என்றாலோ மேலும் தொந்தரவு வரும். கழுத்து, உடற்பயிற்சி, கழுத் தின் மீது ஏற்படும் அழுத் தம் சமநிலை இன்மையைச் சீராக்கும். இயக்கத்தை அதிகரிக்கும். கழுத்தை பாதுகாக்கிற தசைகளை உறுதி செய்யும். எனினும் கழுத்துப் பயிற்சியில் மிதமிஞ்சி விடக்கூடாது. டாக்டர் ஆலோசனைப்படி நிதானமாகவும், படிப்படியாகவும் பயிற்சி செய்யவும்.

0 Response to " செல்போன்-கம்ப்யூட்டரால் கழுத்து வலி பாதிப்பைத் தடுக்க எளிய வழிமுறைகள்"

Post a Comment