நெருப்பு நரி உலாவியில் எளிதான Image Zoom நீட்சி

வழக்கமாக நாம் வலைப்பக்கங்களை பார்வையிடும்பொழுது, நமக்குத் தேவையான படங்களில் சில படங்கள் சிறிதாக இருப்பதால், அவற்றில் உள்ள சில நுணுக்கமான விவரங்களை காண்பதற்கு மிகவும் சிரமமான காரியமாகும்.

ஆனால், நீங்கள் நெருப்பு நரி உலவியை உபயோகப்படுத்துபவராக இருந்தால், Image Zoom எனும் ஒரு சிறிய நீட்சியை உங்கள் நெருப்பு நரி உலவியில் பதிந்து கொள்வதன் மூலம் எந்த ஒரு சிறு படத்தையும் அதனுடைய உண்மையான அளவிலிருந்து 10% முதல் 400% வரை பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ காணமுடியும்.

மொத்தப் பக்கமும் பெரிதாகாமல் ஒரு வலைப்பக்கத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட படம் மட்டும் Zoom ஆவது இந்த நீட்சியின் தனிச்சிறப்பு.

இங்கே சொடுக்கி Image Zoom நீட்சியை தரவிறக்கம் செய்து நெருப்பு நரியில் பதிந்து கொள்ளுங்கள்.

இனி வலைப்பக்கத்தில் உள்ள எந்த படத்தை Zoom செய்ய வேண்டுமோ அந்த படத்தில் கர்சரை வைத்து மெளசின் வலது பட்டனை தட்டினால் Context menu வில் Zoom Image என்ற மெனு வந்திருக்கும் இதில் சென்று உங்களுக்கு தேவையான அளவிற்கு அந்த படத்தை பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ முடியும்.

மேலும், படத்தை அதனுடைய உண்மையான அளவிற்கு மறுபடியும் மாற்ற இந்த மெனுவில் உள்ள Zoom Reset ஐ கிளிக்கினால் போதுமானது.


Real time zoom இற்கு குறிப்பிட்ட படத்தின் மீது மெளஸ் கர்சரை வைத்து மெளசின் வலது பட்டனை அழுத்தியபடி மேலும் கீழும் ஸ்குரோல் செய்தால் படம் பெரிதாகவும், சிறிதாகவும் உங்கள் தேவைக்கு ஏற்றபடி வைத்துக் கொள்ளலாம். மேலும் Custom Zoom மற்றும் Custom Dimension க்கு சென்று நமக்கு தேவையான விகிதங்களை மற்றும் Horizantal / Vertical அளவுகளை கொடுப்பதன் மூலமாக நம் தேவைகளை பூர்த்தி செய்யலாம். இதில் Image Fit போன்ற பயன்பாடுகளும் இதில் உள்ளன.

FireFox -ல் Tools menu சென்று Add-ons ஐ கிளிக் செய்து அதில் Image Zoom -ல் உள்ள Options பொத்தானை அழுத்தி மேலும் நமக்கு தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

0 Response to "நெருப்பு நரி உலாவியில் எளிதான Image Zoom நீட்சி"

Post a Comment