கண்களால் இயங்கும் மடி கணினி !
லண்டன்: கண் பார்வையால் இயங்கும் மடி கணினியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மனிதனின் ஆசைக்கும், தேவைக்கும் எல்லையே இல்லை. அதற்கேற்ப விஞ்ஞானிகளும் புதிது புதிதாக ஏதேனும் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
தற்போது மனிதன் தன் கண் பார்வையாலேயே கட்டுப்படுத்தி இயக்கும் மடி கணினி வந்து விட்டது. இந்த புதிய வகை மடி கணினியின் திரை இயக்குவோரின் கண்பார்வைக்கு கட்டுப்படுகிறது. திரையில் ஒரு பகுதியை வாசித்து முடித்தவுடனே , கண் பார்வை இறங்குவதற்கேற்ப அடுத்த பகுதிக்கு தானாகவே Scroll ஆகி செல்லும் வகையில் இந்த லேப்டாப் ( Laptop ) வடிவமைக்கப் பட்டுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப் பட்டிருக்கும் ஐ ட்ராக்கர், லேப்டாப் பயன் படுத்துபவர்களின் விழிகளுக்கு இன்ஃப்ரா ரெட் கதிர்களைப் ( Infrared rays ) பாய்ச்சும். இரண்டு துல்லியமான கேமராக்கள் விழிகளின் அசைவுகளைவும் விழித் திரைகளின் ( Retina ) பிம்பங்களையும் பதிந்துக் கொள்ளும். இதன் மூலமே கண்களால் கணினி செயல் படும் விந்தை நடக்கிறது.
விசைபலகை ( Keyboard ) , கணிப்பொறி சுட்டி ( Mouse ) ஆகிவற்றுக்கு இந்த மடி கணினி மாற்றாக அமைவதுடன், கணினியின் செயல்பாடு வேகத்தையும் இந்த நவீன தொழில்நுட்பம் அதிகரிக்கும் என இந்த லேப்டாப்பை வடிவமைத்திருக்கும் வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
0 Response to "கண்களால் இயங்கும் மடி கணினி !"
Post a Comment