கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malware bytes Startup Lite
இயங்குதளமே மெதுவாக ஆரம்பிக்கும் வேளையில் இவைகளின் செயல்பாடுகளும் சேர்ந்து கணினியின் வேகத்தை சுமாராக குறைத்து விடுகின்றன. சில மென்பொருள்கள் நிறுவும் போது நம்மிடம் Startup இல் வரவேண்டுமா எனக்கேட்கும். சில மென்பொருள்களை நிறுவும் போது அவை தானாகவே Startup இல் தோன்றுமாறு அமைப்புகளை செய்து விடுகின்றன.
இப்படி நமக்குத் தெரியாமலே Startup இல் அமைந்துள்ள மென்பொருள்களின்
பட்டியலை எப்படிப்பார்ப்பது? Start - > Run சென்று msconfig என்று தட்டச்சிடவும். வரும் விண்டோவில் Startup என்ற பகுதியில் இவற்றைப் பார்க்கலாம். இவற்றில் சில கணினிக்கு அவசியமான மென்பொருள்களும் இருக்கலாம். நமக்கு நிச்சயமாய் தேவையில்லாத மென்பொருள் என்று தெரிந்தால் நீக்கலாம். இல்லாவிட்டால் சிக்கல் தான். இந்த விசயங்களை எளிதாக கையாள Malwarebytes நிறுவனத்தின் StartUpLite என்ற இலவச மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருளின் மூலம் எளிமையான வழியில் தேவையில்லாத இயக்கங்களை முடக்கலாம் (Disable). வேண்டுமென்றால் பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம் (Remove startup programs). இதன் மூலம் கணிணியின் வேகத்தை பாதுகாப்பான வழியில் அதிகரிக்கலாம் என்பது நிச்சயம்.
இதன் மூலம் ஒரே கிளிக்கில் உங்கள் கணினியின் வேகத்தைக் கூட்டலாம். இது விண்டொசின் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக் கூடியது.
தரவிறக்கச்சுட்டி : Download StartUpLite
0 Response to "கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malware bytes Startup Lite"
Post a Comment