அழகை ஆராதியுங்கள்!
அழகை விரும்பாத இளம்பெண்கள் யாருமே கிடையாது. அந்த அழகை பெற பியூட்டி பார்லர்களுக்கு படையெடுக்கும் பெண்கள் ஏராளம்.
இன்னும் சிலரோ, வீட்டுக்குள்ளேயே மினி பிïட்டி பார்லரை ஏற்படுத்தி, தங்களை தினமும் அலங்கரித்துக் கொள்கிறார்கள். காரணம் கேட்டால், `இந்த வயதில் அழகை ஆராதிக்காமல் ஐம்பது வயதிலா ஆராதிக்க முடியும்?' என்று கேட்கிறார்கள்.
நியாயமான கேள்விதான்!
பெண்களின் இந்த மனசை புரிந்து கொண்டதால்தானோ என்னவோ, நம் முன்னோர்கள் ஆரோக்கியமான அழகுக்கு முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறார்கள். ஆனால், நாம் தான்அதை சரியாக பின்பற்றுவதில்லை.
கையில் மருதாணி இட்டுக்கொள்வது தமிழக பெண்கள் இடையே காலம் காலமாகவே இருந்து வருகிறது. இப்போது பலர் மருதாணிக்கு பதிலாக நெய்ல்பாலீசுக்கு மாறிவிட்டார்கள். அந்த நெய்ல் பாலீஸ் அவ்வப்போது நகத்தில் இருந்து உரிந்து விழ, சாப்பிடும்போது அப்படியே வயிற்றுக்குள் போய் ஒரு வழி பண்ணிவிடுகிறது.
ஆனால், மருதாணி வைத்துக்கொள்வதால் இதுபோன்ற பிரச்சினைகளே கிடையாது.
நகங்களின் இடுக்கில் அழுக்கு சேர்வது தவிர்க்க முடியாத ஒன்று. நகத்தை வளர விடாமல் ஒட்ட நறுக்கி வந்தால்தான் அதை தவிர்க்க முடியும். இன்றைய `பரபர' வாழ்க்கை முறையில் பலர் நகம் வெட்டுவதற்குகூட நேரம் இல்லாமல் தவிக்கிறார்கள்.
மருதாணி வைத்துக்கொண்டால் நகங்களின் இடுக்கில் சேர்ந்திருக்கும் அழுக்கில் உள்ள விஷக்கிருமிகளை அது அழித்துவிடும். உடல் உஷ்ணத்தை குறைக்கும் சக்தியும் இந்த மருதாணிக்கு உண்டு.
இதுதவிர, தொற்றுநோயை ஏற்படுத்தும் கிருமிகள் அடிக்கடி மருதாணி இட்டுக்கொள்பவர்களை நெருங்குவது கடினம். சொறி-சிரங்கு போன்ற பிரச்சினைகளும் வராது.
மருதாணிபோல், அந்த காலத்தில் தமிழ் பெண்கள் இடையே மூக்குத்தி அணியும் வழக்கம் அதிகமாக இருந்தது. இன்றும்கூட சில கிராமங்களில் மூக்குத்தி அணிந்துள்ள பெண்களைப் பார்க்கலாம். ஆனால், இன்றுள்ள மாடர்ன் மங்கைகளோ மூக்குத்தியை மறந்தே போய்விட்டார்கள்.
0 Response to "அழகை ஆராதியுங்கள்!"
Post a Comment