அதிக சத்தம், இரைச்சல் கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல

கருச்சிதைவுக்கான காரணங்கள் குறித்து ஜப்பானின் ஒகியாமா மருத்துவப் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் குழு பேராசிரியர் தக்காஷி யோரி புஜி தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.

ஆய்வுக்காக 1997 முதல் 2008&ம் ஆண்டு வரை பிறந்த சுமார் 14 ஆயிரம் குழந்தைகளின் மருத்துவ குறிப்புகளின் உதவி கோரப்பட்டு ஆராயப்பட்டது. இதில் பெரும்பாலான தாய்மார்களுக்கு ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டிருந்தது. கர்ப்ப காலத்தில் தாய் எந்த இடத்தில் வசித்தார் என்று ஆராயப்பட்டது.

ஆராய்ச்சியில் தெரியவந்த விவரங்கள்:

கர்ப்ப காலத்தின்போது தாய் அமைதியான சூழ்நிலையில் இருக்க வேண்டியது அவசியம். அதிக சத்தம், இரைச்சலுக்கு நடுவே வசிக்கும் கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு, குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். எப்போதும் வாகனப் போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும் இடங்களில் இந்த வாய்ப்பு இன்னும் அதிகம். வாகன போக்குவரத்தால் அதிக சத்தம் மட்டுமல்ல, காற்று மாசுபாடும் ஏற்படுகிறது.

மாசுபட்ட காற்றை தாய் சுவாசிப்பதும் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனால், கருச்சிதைவு, குறைப் பிரசவம் நிகழ வாய்ப்பு அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தின்போது தாயின் மனநிலை மட்டுமின்றி, சுற்றுப்புற சூழலும் அமைதியாக இருக்க வேண்டும்.

0 Response to "அதிக சத்தம், இரைச்சல் கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல"

Post a Comment