தோல் குறித்த அபூர்வ செய்திகள்

தாடி முடிதான் வேகமாக வளரக்கூடிய முடியாகும். இந்த முடியை ‘சேவிங்’ செய்யாமல் விட்டால் இவை 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

மனிதத் தோலின் ஒவ்வோர் அங்குலத்திலும் 20 அடி நீள அளவிற்கு ரத்தக் குழாய்கள் இருக்கும்.கை நகங்கள் கால் நகங்களை விட வேகமாக வளரும்.மனிதன் தினமும் 6,00,000 நுண் தோல் பொருட்களை இழக்கிறான். இது ஒரு மணி நேரத்தில் நடைபெறுவதாகும். 1 வருடத்தில் சுமார் 1.5 பவுண்ட் எடையை இவ்வாறு இழக்கும் இவர் தனது வாழ்நாளில் சுமார் 105 பவுண்ட் எடைகளை இழந்து விடுவான்.

தினந்தோறும் குளிக்கும்போதும், தலை சீவும்போதும் மனிதன் சராசரியாக 40 முடிகளை இழக்கிறான்.மனித தோலிலுள்ள நரம்புகளை ஒன்றாக சேர்த்தால் அவை சுமார் 45 மைல் தூரம் உள்ளதாக இருக்கும் (அதாவது 72 கி.மீ. தூரம் கொண்டதாக இருக்கும்.)நமது உடலிலுள்ள தோல் மொத்தம் 2 மீட்டர் அளவு கொண்டது. (20 சதுர அடி.)நமது தோலில் 2 மில்லியன் முதல் 3 மில்லியன் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. இவை கோடைக்காலத்தில் ஒரே நாளில் சுமார் 13 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன.நமது தோலில் வாழும் நுண்கிருமிகளை எண்ணினால், பூமியிலுள்ள மனிதர்களின் எண்ணிக்கைக்கு அது சமமாக இருக்கும்.

பிறந்த குழந்தையின் அக்குள் பகுதியில் 10 நாட்களுக்குள் 5,00,000 நுண்கிருமிகள் சேர்ந்துவிடும்.புதிய தோல் செல்கள் வினாடிதோறும் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும்.தோல் செல்களின் ஆயுள் 2 வாரங்கள்தான்!முடியின் கருப்பு நிறத்திற்கு காரணம் ‘மெலனின்’ என்ற நிறமியாகும்.இதனை தோலிலுள்ள நிறமி செல்கள் உற்பத்தி செய்கின்றன. வயதாக, வயதாக இந்த நிறமி செல்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். இதன் காரணமாகவே வயதாகும்போது முடி நரைக்கிறது.கண்ணிமை முடிகள் முழுவதும் உதிர்ந்து விடுவது அபூர்வமாகும். இதற்கு ‘மேடரோஸிஸ்’ என்று பெயர்.மனிதனுடைய தோல் ஒரு மாதத்திற்கு ஒருமுறை முற்றிலுமாக தோன்றுகிறது. (பழைய தோல் செல்களை இழந்து புதிய செல்கள் உருவாகுவதால்.)மனித தோல் செல்கள் பல்வேறு நுண்கிருமிகளுக்கு எதிராக செயல்படும் பொருளை உற்பத்தி செய்கின்றன.காலில் மட்டும் 2,50,000 வேர்வை சுரப்பிகள் உள்ளன.நமது உடலிலேயே மிகப் பெரிய உறுப்பு தோல்தான்!

0 Response to "தோல் குறித்த அபூர்வ செய்திகள்"

Post a Comment