Save செய்யாத Office (F)பைலை பெற


Ms Office தொகுப்பில், ஏதேனும் ஒரு, எடுத்துக்காட்டாக வேர்ட், எக்ஸெல், தொகுப்பினை இயக்கி அதில் புதியதாக ஒரு பைலை உருவாக்குகிறீர்கள். நம்மில் பலர், அந்த முழு பைலும் முடிந்த பின்னர்தான், அதற்குப் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவோம்.

முதலிலேயே சேவ் செய்து பெயர் கொடுத்தாலும், பின்னர் பைலின் பெரும்பகுதியினை முடித்து இறுதியில் தான் சேவ் செய்திடுவோம்,

ஒருவேளை என்ன பல வேளைகளில், இதனை தொடக்கத்திலிருந்தே சேவ் செய்யாமல் மூடிவிடுவோம். அவசரமாகக் கம்ப்யூட்டரை மூடிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில் பலர் என்ன ஒப்ஷன் கேட்கப்படுகிறது என்று அறியாமலேயே, படக் என பைலை சேவ் செய்யாமல் மூடிவிட ஒப்ஷன் கிளிக் செய்துவிடுவார்கள்.

அப்புறம் அடடா தவறு செய்துவிட்டோமே என்று பைலை எப்படிப் பெறுவது என்று விழிப்பார்கள். வழி இல்லை என்ற முடிவிற்கு வந்தால், மீண்டும் அந்த பைலை உருவாக்குவார்கள்.

இவர்களுக்காகவே, Ms Office 2010 தொகுப்பில்AutoRecover என்ற ஒரு வசதி உள்ளது. இந்த வசதியை சேவ் செய்யப்படாத பைல்களையும் சேவ் செய்திடும் வகையில் செட் செய்திடலாம். அது இந்த வசதியில் ஒரு போனஸ் வசதியாகும்.

இந்த மந்திரத்தை அமைத்து செயல்படுத்திட, File டேப் கிளிக் செய்து, அதில் Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். ஆப்ஷன் டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன், இடது பக்கம் உள்ள Saveபிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

வலது பக்கம், Save last auto saved version if I close without saving என்று இருப்பதனை செக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். இனிமேல், நீங்கள் சேவ் செய்திடாத பைலையும், மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.

கொஞ்சம் பொறுங்கள், எப்படி சேவ் செய்யாத பைலை மீட்டுப் பெறுவது என்று சொல்லவில்லையே! File டேப் செல்லவும். இந்த டேப்பில் Recent என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதனடியில் கிடைக்கும் தகவல்களில், கீழாக வலது மூலையில், Recover Unsaved Documents என்று ஒரு பட்டன் இருப் பதனைக் காணலாம்.

இந்த பட்டன், உங்களை புரோகிராம் தானாக, நீங்கள் சேவ் செய்யாத பைலை சேவ் செய்திட்ட இடத்திற்கு எடுத்துச் செல்லும். இங்கே இத்தகைய பைல்கள் அனைத்தும் இருக்கும். உங்களுக்கு, அப்போது எந்த பைல் வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்து பின்னர் Open என்பதில் கிளிக் செய்திடவும். பைல் திறக்கப்படும். இப்போதாவது ஞாபகமாக சேவ் செய்திடவும்.

0 Response to "Save செய்யாத Office (F)பைலை பெற"

Post a Comment