கண்ணுக்கு மை அழகு

 அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகத்தின் அழகை மட்டுமல்ல... உடலின் குறைபாடுகளையும் கூட அப்பட்டமாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியும் கண்கள்தான். உடல் நலக்குறையு, களைப்பு, சோர்வு, வயதாவதன் தாக்கம் இப்படி உடம்பின் கோளாறுகள் எதுவானாலும் முதலில் தெரிவது கண்கள் மூலமாகத் தான்.

 அதற்குக் காரணம், கண்களுக்கு அடியில் உள்ள திசுக்கள் மிக மிக மென்மையானது. எளிதில் பாதிக்கப்படக்கூடியது. இங்கு வியர்வை மற்றும் எண்ணெய்ச் சுரப்பிகள் இல்லாததால் மிகவும் ஜாக்கிரதையாகக் கையாளப்படவேண்டிய பகுதி இது. நீண்ட நேரம் டி.வி. பார்ப்பது, படிப்பது போன்று கண்களுக்கு அதிக வேலை கொடுப்பதால் கண்கள் எளிதில் சோர்வடையும். மேலும் எக்கச்சக்க வெளிச்சம், தூசு, காற்று, மனஅழுத்தம் போன்றவை கூட கண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

 கண்களை ஹெல்த்தியாக வைத்துக் கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிப் பார்ப்போம்.

 மது அருந்துவது புகைபிடிப்பது போன்றவை விட்டொழிக்கப்பட வேண்டிய சமாச்சாரங்கள். இரவில் நேரத்தோடு படுக்கச் சென்று விடியற் காலையில் எழுந்திருப்பதால் கண்கள் களைப்பின்றிச் சுறுசுறுப்பாக இருக்கும். கண்களுக்கு அடியில் கருவளையம் ஏற்படாமல் தடுக்கவும் செய்யலாம்.

 தினப்படி சாப்பாட்டில் 'விட்டமின் &ஏ' சத்து சரியான அளவு இருக்க வேண்டும். முட்டையின் மஞ்சள் மற்றும்  பச்சைநிற காய்கறிகள், கேரட் ஆகியவற்றில் 'விட்டமின்&ஏ' சத்து நிறைய உள்ளது. இது தவிர, சாப்பாட்டில் ஃபிரெஷ் காய்கறி மற்றும் பழங்கள் அடங்கிய சாலட் இருப்பது நல்லது. தினமும் குறைந்தபட்சம் 10 டம்ளர் தண்ணீராவது குடித்தால்தான் கண்களுக்கு அடியில் பை மாதிரி சதை தொய்ந்து போகாமல் இருக்கும்.

 மேக்கப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்கள். புது மேக்கப் பொருளை உபயோகிக்கும்போது, கண்களில் எரிச்சல் ஏற்பட்டாலோ கண்கள் சிவந்து போனாலோ அதை உபயோகிக்காதீர்கள். அப்படி அலர்ஜியாகிவிட்டால் சுயசிகிச்சை எதுவும் எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக டாக்டரிடம் செல்லுங்கள்.

 முகத்துக்கு 'மாஸ்க்' போடும் போது கண்களை சுற்றி எதுவும் போடக்கூடாது, ஹெவி க்ரீம் எதையும் கண்களுக்கு அடியில் பூசக்கூடாது. மசாஜ் செய்வதும் கூடாது. பாதாம் பருப்பில் பால் விட்டு மையாக அரைத்து அதை கண்களுக்கடியில் பூசி பத்து நிமிடத்துக்குப் பிறகு ஈரமான பஞ்சினால் துடைக்கவும்.

 நட்சத்திரம் மாதிரி கண்கள் பளபளக்கவும் களைப்பின்றி இருக்கவும் ஒரு எளிய சிகிச்சை:  ரோஸ் வாட்டரை பிரிஜ்ஜில் வைத்திருது அவ்வப்போது பஞ்சை இந்த ரோஸ் வாட்டரில் நனைந்தெடுத்து, மூடிய கண்கள் மீது பத்து நிமிடட்ட் வைத்திருங்கள், கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதே மாதிரி வெள்ளரிக்காய் சாறு, உருளைக்கிழங்குச் சாறு ஆகியவற்றையும் உபயோகப்படுத்தலாம்.

 சூரிய வெளிச்சம் கண்களுக்குக் கெடுதல். ஆகவே வெயில் நேரத்தில் வெளியில் சுற்றுவதை முடிந்தவரை தவிர்க்கலாம். அப்படியே போவதானாலும் கூலிங்கிளாஸ் அணிவது சிறப்பு. ஆனால்

 அவைதரமான கண்ணாடியாக இருக்க வேண்டும், கண்களின் டென்ஷனை நீக்க எளிமையான சில பயிற்சிகளும் உண்டு.

 ஜன்னருகே
 இப்படி ரெகுலராக இந்த எக்சர்சைஸ்களைச் செய்துவந்தால் கண்கள் நன்கு ரிலாக்ஸ் ஆகும். சில சமயம் கண்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காததாலும் கண்கள் களைப்புறும். அப்படிப் பட்ட சமயங்களில் மூச்சை நன்றாக இழுத்துவிடுவது நல்ல பலனளிக்கும்.
சென்று நில்லுங்கள். முதலில் மிகவும் அருகேயுள்ள பொரு எதையாவது ஒரு விநாடி பாருங்கள். உடனடியாக ஜன்னலுக்கு வெளியே வெகுதூரம் வரை பார்வையைச் செலுத்துங்கள். இப்படி மாற்றி மாற்றி பத்து நிமிடம் செய்யுங்கள். சமயம் நேரும் போதெல்லாம் பசுமையான நிறத்திலுள்ள பொருட்களை பார்த்து வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும்.

 ஒரு இடத்தில நேராக நின்று கண்களை மட்டும் சுழற்றி அறையை முழுமையாகப் பார்வையிடுங்கள். இப்படி கண்களை முதலில் வலமிருந்து இடமாகவும், பின்னர் இடமிருந்து வலமாகவும் சுழற்ற வேண்டும். தலையை அண்ணாந்து நோக்கி, விட்டத்தைப் பார்த்த கையோடு, முகத்தைக் குனிந்து தரையைப் பாருங்கள்.

 இப்படி 10 முறை செய்ய வேண்டும். அடுத்தபடியாக கண்களை மட்டும் வலது கோடிப் பக்கம் திருப்பி உடனடியாக இடதுகோடி பக்கமாகப் பார்க்க வேண்டும். இந்த பயிற்சிகளைச் செய்யும்போது கண்களைக் கொட்டக்(இமைக்க)கூடாது. நடுநடுவே கண்களை இறுக்கமாக மூடி அகலத் திறந்து பார்க்க வேண்டும்.
 

0 Response to "கண்ணுக்கு மை அழகு"

Post a Comment