மருந்து… மாத்திரை… உணவு!

சில நோய்களுக்கான மருந்துகளை சாப்பிடும் காலகட்டத்தில் மிகுந்த ஆரோக்கியம் தருவதாக நம்பும் உணவு வகைகளைக்கூட சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் எதிர்விளைவுகள் ஏற்பட்டு விடும்.
* தொற்றுநோயின் பாதிப்பிற்காக `அன்டிபயோடிக்’ மருந்துகள் சாப்பிடுவோர், பாலையும், `யோகர்ட்’ உள்ளிட்ட பால் சார்ந்த உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். இறைச்சியையும் ஒதுக்கி விடலாம்.
* வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான மருந்துகளை வேறு எந்த மருந்துகளுடனும், குறிப்பாக `ஆன்டிபயாட்டிக்கு’களுடன் எடுத்துக் கொள்ளாதீர்கள். இதனால் வயிற்றுப் போக்கு இன்னும் மோசமாகி விடும்!
* ஒவ்வாமைக்காக மருந்து சாப்பிடும்போது, நெருப்பில் சுட்ட இறைச்சி, பசலைக் கீரை, முட்டை, வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
* தைராய்டு பிரச்சினைக்கு மருந்து எடுத்துக்கொள்ளும்போது, கல்சியம் செறிந்த உணவுகள், முட்டைக்கோஸ், சோயாபீன்ஸ் போன்ற உணவுகளை தவிர்த்திடுங்கள். வேறு வழியின்றி சாப்பிடுவதாக இருந்தாலும், தைரொய்ட்மருந்து சாப்பிட்டு பல மணி நேரம் கழித்து மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.
* நீங்கள் வலிநிவாரணி மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிகமாக இலைக் காய்கறிகளை சாப்பிடாதீர்கள். அவை மருந்தின் வேகத்தை மட்டுப்படுத்தும்.
* மாத்திரைகளை வெந்நீர் அல்லது சூடான பானத்துடன் சாப்பிடும் வழக்கமுள்ளவரா? அதைத் தவிர்த்திடுங்கள். சூடானது, மாத்திரைகளின் திறனைப் பாதிக்கலாம்.
* மருந்தை சாப்பிடும் கஷ்டம் தெரியாமலிருக்க அதை உணவுடன் கலந்து சாப்பிட நினைக்கிறீர்களா? வேண்டாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட வேண்டாம்.

0 Response to "மருந்து… மாத்திரை… உணவு!"

Post a Comment