குழந்தைகள் வண்ணம் பூச இலவசமாக படம் கொடுக்கும் புதிய தளம்.
குழந்தைகள் படம் வரைந்து கலர் கொடுப்பதைவிட ஏற்கனவே
வரைந்த படங்களுக்கு கலர் கொடுப்பதையே விரும்புகின்றனர். இதற்காக
நாம் தமிழ் வாரப்பத்திரிகை வாங்க வேண்டாம். இணையம் மூலம்
இலவசமாக வண்ணம் பூச படங்களை கொடுக்கின்றனர் இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
நாள் ஒரு வரைபடம் நம் குழந்தைகளுக்கு கிடைக்கும் அதில்
குழந்தைகள் தங்களின் கைவண்ணத்தை காட்டுவர் அதுபோல்
ஒவ்வொருவாரமும் படத்திற்காக நாம் காத்திருக்க வேண்டாம்
ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களை
இலவசமாக கொடுக்கிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://www.thecolor.com

படம் 2
அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும் அடுத்து நாம் Paint ஐ
திறந்து விரும்பிய வண்ணத்தை கொடுத்து மகிழலாம். இதில் என்ன
வேடிக்கை என்றால் புத்தகத்தில் வரும் படங்களுக்கு நாம் ஒரு முறை
மட்டும் தான் வண்ணம் பூச முடியும் ஆனால் கணினி மூலம் paint
செய்வதால் படத்தை காப்பி செய்து வைத்துக்கொண்டு ஒரே
படத்திற்கு வித்தியாசமாக பல தடவை வண்ணம் பூசி பழகலாம்.
இனி தமிழ் செய்தித்தாளில் வாரம் ஒரு முறை வரும் படத்திற்காக
நம் குட்டீஸ் காத்திருக்க வேண்டாம் நினைத்த நேரத்தில் சென்று
படத்திற்கு வண்ணம் கொடுக்கலாம் கூடவே எந்த மைச்செலவும்
ஆகப்போவதில்லை.
0 Response to "குழந்தைகள் வண்ணம் பூச இலவசமாக படம் கொடுக்கும் புதிய தளம்."
Post a Comment