இணையதளத்தில் பயன்படுத்தப்படிருக்கும் மொத்த கலர் (Color) எளிதாக கண்டுபிடிக்கலாம்.

நாம் பார்க்கும் பெரும்பாலன இணையதளங்களில் சில இணைய
தளங்களின் வண்ணம் (Color) நமக்கு பார்க்க அழகாக இருக்கும்
இப்படி நமக்கு பிடித்த இணையதளங்களின் வண்ணத்தை எளிதாக
கண்டுபிடிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
இணையதள வடிவமைப்பாளரும் இணையதளத்தின் உரிமையாளரும்
தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று வண்ணங்களை சரியாக
பயன்படுத்துவது தான் , மேலும் அதிகமான வண்ணங்கள்
பயன்படுத்தாமல் இரண்டு அல்லது மூன்று வண்ணங்களுக்குள்
உருவாக்கப்படும் பல இணையதளங்கள் மக்கள் மத்தியில் நல்ல
வரவேற்பை பெற்றிருக்கின்றன என்றால் அது மிகையாகாது அந்த
அளவிற்கு வண்ணத்துக்கு இருக்கும் முக்கியத்துவதை உணந்து
சில அழகாக பயன்படுத்தப்பட்டிருக்கும் இணையதளங்களின்
வண்ணங்களை எளிதாக கண்டுபிடிக்கலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://redalt.com/Tools/I+Like+Your+Colors

இந்தத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டிடபடி நமக்கு பிடித்த
இணையதளத்தை கொடுத்து Get colors என்ற பொத்தானை
அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த
இணையதளத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வண்ணங்கள்
தனியாக பிரித்து காட்டப்பட்டிருக்கும் கூடவே அந்த வண்ணத்தின்
Color code -ம் சேர்ந்தே இருக்கும். பிடித்த இணையதளங்களில்
பயன்படுத்தப்படிருக்கும் வண்ணம் என்னவென்று அறிய
விரும்புபவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

0 Response to "இணையதளத்தில் பயன்படுத்தப்படிருக்கும் மொத்த கலர் (Color) எளிதாக கண்டுபிடிக்கலாம்."

Post a Comment