Outlook Express -ல் இருக்கும் இமெயிலை பேக்கப் எடுத்து வைக்கலாம்.

அவுட்லுக் எக்ஸ்பிரஸ்-ல் இருக்கும் மொத்த இமெயிலையும் சில
நிமிடங்களில் பேக்கப் எடுத்து வைக்கலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் நம் கணினியை முதலில்
தாக்கும் போது அதிக முக்கியத்துவத்துடன் இமெயிலைத்தான்
குறிவைக்கின்றன இப்படி வைரஸ் தாக்கிய பின்பு நம் அவுட்லுக்
மெசேஸ்கள் அனைத்தும் மீட்க முடியாமல் போகிறது இந்தப்
பிரச்சினையிலிருந்து நமக்கு உதவ அவுட்லுக் எக்ஸ்பிரஸை
பேக்கப் எடுத்து வைக்கலாம். பேக்கப் எடுப்பதற்கு நமக்கு
உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. Download என்ற இந்த
முகவரியை சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.
Download
இந்த மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும்
அடுத்து மென்பொருளை இயக்கி அதில் File மெனுவை சொடுக்கி
அங்கு இருக்கும் Backup Wizard என்பதை தேர்ந்தெடுக்கவும்.
வரும் திரையில் எந்த தேதியில் இருந்து பேக்கப் எடுக்க வேண்டும்
என்ற தகவல் வரும் எல்லாம் கொடுத்து முடித்த பின் Next என்ற
பொத்தானை அழுத்தவும் அடுத்து வரும் திரையில் அவுட்லுக்
செய்திகளை எங்கு சேமிக்க வேண்டும் என்று கேட்கும் அதையும்
தேர்ந்தெடுத்துக்கொண்டு Next என்ற பொத்தானை சொடுக்கி
சேமிக்கலாம்.  இந்த மென்பொருள் உதவியுடன் Delete செய்த
இமெயிலையும் மீட்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு அவுட்லுக்
எக்ஸ்பிரஸ் பயன்படுத்தும் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

0 Response to "Outlook Express -ல் இருக்கும் இமெயிலை பேக்கப் எடுத்து வைக்கலாம்."

Post a Comment