சிவனின் பல்வகை சொரூபங்கள்

பகவத் தியானத்தில் ஈடுபட்டவர்கள், கண்ணை மூடி  மவுனமாக தியானம் செய்வர். கண்ணை திறந்து கொண்டிருந்தால், பல விஷயங்களை பார்க்க தூண்டும்; அதனால், தியானம் கலையும். அதேபோல வாய், மூக்கு, அங்கங்கள் மூலமாகவும் தியானத்துக்கு பங்கம் ஏற்படலாம்.  தியானத்துக்கு தனிமை முக்கியம். இப் படி புலன்களை அடக்கி, தியானம், தவம் செய்பவர்களை ஞானிகள் என்று அழைப்பர். அஞ் ஞானத்தில் உழல்பவர்களுக்கு இடையே செல்வ செழிப்பு, ஏழ்மை, வறுமை, மேலான பிறவி, இழிந்த பிறவி போன்ற வேற்றுமைகள் இருக்கும்.  தியானத்தில் ஈடுபட்டு, சமாதி நிலையில் உள்ளவர்கள், இது போன்ற மாயாபேதங்களை உணர மாட்டார்கள். இந்த நிலையில் குறைபாடு ஏற்பட்டால், அதற்கு காரணம் மனம் தான். இந்த பிரபஞ்சம் சக்தி, சிவசக்தியால் நடைபெறுகிறது. எட்டு போன்ற சொல் அஷ்டமூர்த்தியை குறிக்கும். நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய இந்த எட்டு ஜட வஸ்துகளும் ஈசனுடைய சொரூபங்கள். பஞ்ச பூதங்களையும் அவன் சொரூபமாக வழிபடுவதே வழக்கம். காஞ்சியில் பிருத்விலிங்கம், திருவானைக்காவலில் அப்புலிங்கம்;  திருவண்ணாமலையில் அக்னி லிங்கம்; காளஹஸ்தியில் வாயு லிங்கம்; சிதம்பரத்தில் ஆகாச லிங்கம் என்றுள்ளது. இவை யாவும் சிவ சொரூபம். அடுத்து, ஆத்மசாதகனுக்கு வாய்த்துள்ள மனம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்த கரணங்களை சிவ சொரூபமாக கருதி, சிவ ஆராதனைக்காகவே அவைகளைப் பயன்படுத்துவது சிவனுக்கு நாம் செய்யும் நன்றி.
பிரகிருதி புருஷன்… அதாவது, சக்தி – சிவம் ஆகிய இரண்டும் சேர்ந்தது அர்த்த நாரீசுவரர்; அதாவது உயிர், உடல் இரண்டும் சேர்ந்தது. இதில் ஒன்றில்லாவிடில் ஒன்றில்லை. “உனக்கு தான் சக்தி இல்லையே! சிவனேன்னு கிடக்க வேண்டியது தானே!’ என்று  சொல்வது வழக்கம். அதனால், உடலுக்கு சக்தி முக்கியம். சிவ சொரூபத்தில் இந்த எட்டும் மிக ஸ்தூல நிலையில் உள்ளன. இதை அறியாதவர்கள் அவருடைய சூட்சும நிலை, காரண நிலை, அதீத நிலை, அகண்ட நிலை இவைகளை அறிவது கடினம். தெளிந்த மனதுடன் பகவானை தியானித்தால், பகவானின் உருவம் கண்ணுக்குத் தெரியும். இது ரொம்ப அபூர்வம். அப்படி தெரியாவிட்டால், அது மனிதன் குற்றம் தான்.  அதனால், மனதை தெளிவுப்படுத்தி, பகவானிடமே வைத்து, தவம் செய்து அவனை தரிசிக்கின்றனர் யோகிகள். அப்படி பகவத் தரிசனம் கிடைத்து விட்டால் பேரானந்தமடைகின்றனர்.  பகவானிடம் அவர்கள் இகத்துக்கு வேண்டிய சுகத்தை வேண்டுவதில்லை; பரலோக சுகத்தை, அதாவது, முக்தியை வேண்டுகின்றனர். பகவானின் பூரண அருள் பெற, மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்

0 Response to "சிவனின் பல்வகை சொரூபங்கள்"

Post a Comment