மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்:


நலமாக வாழ நம் மனதை எப்பொழுதும் ரிலாக்ஸாக வைக்க வேண்டும்..

டென்ஷன் யாருக்கு தான் இல்லை.. என்பதனை மனதில் எண்ணிக்கொண்டு சாதாரணமான வாழ்க்கையினை வாழுங்கள். அதிகமான  டென்ஷனும், அதிகமான கவலை மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எதிரி என்பதனை மறந்துவிடாதீர்கள்.

அதிகமான மன கவலைக்கு என்ன காரணம் என்று பார்த்தால் எனக்கு தெரிந்து சில விஷயங்கள்

பணநெருக்கடி
குடும்ப பிரச்சனைகள்
வேலையின்மை
வியாபாரத்தில் நஷ்டம்
காதல்/கல்யாண வாழ்க்கையில் கசப்பான அனுபவம்
நோய்கள்
படிப்பு
சுற்றுச்சூழலில் ஏற்படும் மனகசப்புகள்


இது போன்ற சில காரணங்கள் தான் மனிதர்களை பரிதவிர்க்க வைக்கும்..
இந்த கவலைகளுக்கு எல்லாம் நம் மனதில் இடம் கொடுத்துவிட்டால் நாம் என்றைக்குமே தெளிவாக எதையும் சிந்திக்க முடியாது.. மனம் குழப்பத்தில் இருக்கும் பொழுது உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். இதுவே பல நோய்களை கொண்டு வருவதற்கு காரணமாகிவிடும்.

சிலருக்கோ மனதில் கவலை இருப்பதை வெளியே சொல்ல முடியாமல் மனதில் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு மனநோய் வர வரவாய்பிருக்கிறது.. அல்லது பார்ப்பவர்கள் மேல் அதிக கோபம். குடும்பத்தில் இருக்கும் அனைவரிடமும் சிடுசிடு முகத்தினை வைத்துக்கொண்டு கோபமாக பேசுவார்கள். அனைவரையும் விட்டு பிரிந்தே இருப்பார்கள். குழந்தைகளுடன் கூட சிரித்து பேசமாட்டார்கள். அவர்களை பார்க்கும் எமக்கே ஏன் இப்படி இருக்கிறார் என்று எமக்கும் அவர்கள் மீது வெறுப்பு வரும். இது போல் தொடர்ந்து கவலைக்கு மனதில் இடம் கொடுத்தால் நோய்பாதிப்புகள் மட்டும் வராது கூடவே தற்கொலை எண்ணம் கூட சிலரின் மனதில் வந்துவிடும்.



கவலையினை தீர்க்க சில வழிகள் இருக்கிறது:

மனதிலே கவலை வந்தால்.. ஓர் அமைதியான இடத்தில் இருந்து என்ன காரணங்களால நாம் இப்படியிருக்கிறோம் இந்த கவலை வர காரணம் என்னவென்று சிந்தியுங்கள்..

இது தான் காரணம் என்று தெளிவாக தெரிந்த பின்பு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று தீர்மானியுங்கள்

யாரிடம் இதனை பற்றி பேசினால் கவலை தீரும் என்று முடிவு செய்து அதனை பேசி சரிசெய்யுங்கள்.

இந்த மனக்கவலை என்றுமே இனி வாழ்வில் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

வாழ்வில் கவலையே வராமல் இருக்க சில டிப்ஸ்:
உங்களின் நெருங்கிய நண்பர்களுடன் மனம்விட்டு பேசுங்கள்.
உங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் உங்களுக்கு பிடித்தமான வேலைகளை செய்யுங்கள்.

நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் முழுமனதுடன் ஈடுபடுங்கள்.

ஓய்வு நேரங்களில் நல்ல படங்கள், நல்ல புத்தகத்தினை படியுங்கள், நல்ல பாடங்கள் கேளுங்கள் மனம் ரிலாக்ஸாக இருக்கும்.

யோகாவும் செய்வது மனதினை ஒரு நிலை படுத்த உதவும்.

அன்றைய வேலைகளை அன்றே செய்துவிடுங்கள்.

உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை மனதில் போட்டு வைக்காதீர்கள்.


கவலை என்றுமே நிரந்தரமில்லை.. கவலைபட்டு கொண்டே இருப்பதும் இதுக்கு தீர்வு இல்லை கோழைகள் தான் கவலையினை கண்டு பயப்படவேண்டும்.

0 Response to "மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்:"

Post a Comment