டிஜிட்டல் சாதனத்திற்கான தகவல் குறிப்புகள்



அன்றாட உலகில் நாம் டிஜிட்டல் சாதனம் இல்லாமல் நம் வேலைகளைத் தொடர முடியாது. இவை கால்குலேட்டரிலிருந்து கம்ப்யூட்டர் வரை, மொபைல் போன் முதல் டிஜிட்டல் கேமரா வரை, தொலைக்காட்சி முதல் வாஷிங் மெஷின் வரை பல வகைப்படுகின்றன. இவற்றினை வாங்கும்போது, இவை பயன்படுத்துவது குறித்த தகவல் நூல் ஒன்று யூசர் மெனுவல் (User Manual ) என்ற பெயரில் தரப்படுகிறது. ஆனால் நம்மில் பலர் இதனை அவ்வளவாகப் பயன்படுத்துவது இல்லை. படிப்பதும் இல்லை. இதனால் நாளடைவில் இவை வீடுகளில் பரண்களில் இடம் பிடிக்கின்றன. பின் நாளில் ஏதேனும் பிரச்னை வந்து, டெக்னீஷியனிடம் ரிப்பேர் பார்க்கச் செல்கையில், இதனுடன் தரப்பட்ட யூசர் மெனுவல் எங்கே என்று அவர் கேட்கும்போதுதான், ஊறுகாயைக் கடித்த நிலையில், அய்யோ அதை எங்கேயோ பத்திரமாக வைத்திருக்கிறோம். ஆனால் எங்கிருக்கிறது என்று தெரியவில்லையே என்று கைகளைப் பிசைகிறோம். இதற்கு தீர்வு தரும் வகையில் ஓர் இணையத்தளம் இயங்குகிறது. இங்கு சென்றால், பெரும்பாலான டிஜிட்டல் சாதனங்களுக்கான யூசர் மெனுவல் கிடைக்கிறது. டவுண்லோட் (இலவசமாத் தானுங்க) செய்து அச்செடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்த இணைய தள முகவரி : http://www.retrevo.com/samples/index.html இதில் உள்ள பிரிவுகளில் இருந்து நாம் தேடும் சாதனத்தின் பெயர் அல்லது நிறுவனத்தின் பெயரைக் கொடுத்து எளிதாகத் தேடி அறியலாம். குறிப்பிட்ட சாதனத்தின் மொடல் எண்ணையும் தந்து சரியான யூசர் மெனுவலைப் பெறலாம்.

0 Response to "டிஜிட்டல் சாதனத்திற்கான தகவல் குறிப்புகள்"

Post a Comment