காதல‌ர்களு‌க்கு ‌‌சில ‌விஷய‌ங்க‌ள்


காதல‌‌ர்க‌‌ளி‌ல் இரு வகை உ‌ண்டு, பெரு‌ம்பாலு‌ம் பே‌சி‌ப் பழ‌கிய‌ப் ‌பி‌ன்னரே காதல‌ர்களாக ஆவது‌ம், பா‌ர்‌த்த மா‌த்‌திர‌த்‌‌திலேயே காத‌ல் உ‌ண்டா‌கி காதலை‌த் தெ‌ரி‌வி‌த்த ‌பி‌ன் காதல‌ர்களானவ‌ர்களு‌ம் உ‌ண்டு.

இ‌தி‌ல் எ‌ந்த வகையாக இரு‌ந்தாலு‌ம், காதல‌ர்க‌ள் ‌சில அடி‌ப்படையான ‌விஷய‌ங்க‌ளி‌ல் அ‌திக கவன‌ம் செலு‌த்த வே‌ண்டு‌ம். அதாவது,

காதல‌‌ர்க‌ள் எ‌ங்கு செ‌ன்றாலு‌ம் இருவரது பாதுகா‌ப்பையு‌ம் க‌ரு‌த்‌தி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள். செ‌ல்லு‌ம் இடமு‌ம், போ‌ய் வரு‌ம் நேரமு‌ம் பாதுகா‌ப்பானதாக இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் அமையு‌ம் படி ‌தி‌ட்ட‌மிடு‌ங்க‌ள்.

காதலரை ம‌ற்றவ‌ர்க‌ள் மு‌ன்பு குறைவாக ம‌தி‌ப்‌பி‌ட்டு‌ப் பேசா‌தீ‌ர்க‌ள். இது உ‌ங்க‌ள் காதல‌ர் மன‌தி‌ல் பெரு‌ம் பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்து‌ம்.

கரு‌த்து வேறுபாடு ஏ‌ற்படு‌ம்போதெ‌ல்லா‌ம் காதல‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் குறைகளை‌ப் ப‌‌ட்டிய‌லிடா‌தீ‌ர்க‌ள். அத‌‌ற்கு ப‌திலாக அவ‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் ‌ந‌ற் குண‌ங்களை‌ எடு‌த்து‌க் கூ‌றி இ‌ப்படி‌ப்ப‌ட்ட ‌நீ‌ங்களா இதை‌ச் சொ‌ன்‌னீ‌ர்க‌ள் அ‌ல்லது செ‌ய்‌தீ‌ர்க‌ள் எ‌ன்று கூ‌றினா‌ல் ச‌ற்று மேலாக இரு‌க்கு‌ம்.

காதலரை ‌விட ‌‌நீ‌ங்க‌ள் உய‌ர்‌ந்தவ‌ர் எ‌ன்ற அடி‌ப்படை‌யி‌ல் எ‌ந்த பே‌ச்சு‌ம் இரு‌க்க‌க் கூடாது. இருவரு‌ம் ஒரே உ‌யி‌ர் எ‌ன்பது போ‌ன்று‌ம், ஒருவரை ஒருவ‌ர் ந‌ம்‌பி வா‌ழ்வது போ‌ன்று‌ம் உ‌ங்க‌ள் பே‌ச்சு இரு‌க்க‌ட்டு‌ம்.

ம‌ற்றவ‌ர்களை‌ப் ப‌ற்‌றிய அடி‌க்கடி காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் பே‌சி‌க் கொ‌ண்டு இரு‌ந்தா‌ல் அவ‌ர்களு‌க்கு ச‌‌லிப்பு ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம்.

இவை அனை‌த்தையு‌ம் கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு உ‌‌ங்க‌ள் பே‌ச்சு‌ம் செ‌ய்கையு‌‌ம் இரு‌க்க‌ட்டும‌்.

0 Response to " காதல‌ர்களு‌க்கு ‌‌சில ‌விஷய‌ங்க‌ள்"

Post a Comment