நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வாழ்க்கை முறை

நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள கார்போஹைட்ரேட்டை (சுகர்) பிரித்து சக்தியாக்கி உடலிற்குத் தரும் ஒரு செரிமான சுரப்பு நீ்ர் (இன்சுலின்), போதுமான அளவு சுரக்காமல் போனாலோ அல்லது அது சுரப்பு நீர் பயன்படுத்தப்படாத ஒரு நிலை ஏற்பட்டாலோ, கரையாத அந்த கார்ப்போஹைட்ரேட் இரத்தத்தில் கலப்பதால் நமது உடலின் இயக்கத்தை தாக்குகிறது. குறிப்பாக இரத்த நாளங்களையும், நரம்புகளையும் தாக்குகிறது. இதுவே நீரிழிவு (சர்க்கரை) வியாதி ஏற்படக் காரணம் என்று மருத்து அறிவியல் கூறுகிறது.

நீரிழிவு வியாதியை அதன் தாக்கங்களின் அடிப்படையைக் கொண்டு இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள் மருத்துவர்கள். ஒன்று, வாந்தி வருவது போன்ற உணர்வு, வாந்தியெடுத்தல், உடல் எடைக் குறைதல், சக்தியற்றதாக உணர்தல் ஆகியன இதன் அறிகுறிகளாகும். இரண்டாவது, தாகமெடுத்தல், அதிகமாக சிறு நீர் கழித்தல் (பாலியூரியா), அதீத பசி உணர்வு, களைப்பு, தோலில் பாதிப்பு ஏற்படுதல் அல்லது சீறுநீர் போக்கில் பாதிப்பு, காயமேற்பட்டால் ஆற நீண்ட காலமாதல், பார்வை குறைதல் ஆகியன இரண்டாவதன் அறிகுறிகளாகும்.
நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகிய இந்த இரண்டு நோய்களால் பாதிக்கப்பட்ட எவராயினும், அவர்கள் மிகவும் முறைபடுத்தப்பட்ட ஒரு வாழ்க்கையை கடைபிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் காலையில் உடற்பயிற்சி செய்தல். தூய்மையான சூழல் உள்ள இடத்தில் வேகமாக நடைப் பயிற்சி செய்தல், யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி (பிராணயாமா), தியானம் ஆகியவற்றை (முறையான ஆசிரியரின் வழிகாட்டுதலில்) செய்லாம்.

பழங்கள், காய்கறிகள் கொண்ட உணவுப் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும். அதிக சக்தி தரும் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். எதற்காகவும் பதற்றமடைதலைத் தவிர்க்க வேண்டும். ஒரு அமைதியுள்ள நிலையில் மனதை வைத்திருக்க வேண்டும்.

இளமையில் இருந்தே நன்கு அறிமுகமாக மருத்துவர் ஒருவரிடமோ அல்லது அவர் ஆலோசனையின் பேரிலோ குறித்த கால இடைவெளிகளில் மருத்துவ சோதனை செய்துக்கொள்ள வேண்டும். உடலின் தன்மையை நன்கு புரிந்துகொண்டு அதற்கு இணங்க பழக்க வழக்கங்களை முறைபடுத்திக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தங்களை நோயாளி என்று மட்டும் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது.

0 Response to "நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வாழ்க்கை முறை"

Post a Comment