அலுவலகங்களுக்கு ஏற்ற ஆடை எது?

  மனிதர்களை அழகுப்படுத்திக் காட்டுவது அவர்கள் அணியும் ஆடைகள்தான். ஆனால், எல்லா ஆடைகளையும் எல்லா இடங்களுக்கும் அணி;ந்து செல்ல முடியாது. இடத்திற்கேற்ப ஆடை அணிவது அவசியம். alt
ஆண்களும் பெண்களும் ஒவ்வொரு தருணங்களுக்கு ஏற்ப ஆடை அணிந்து கொள்வதுதான் அவர்களுக்கு சிறப்பைத் தருகின்றது.

அந்தவகையில் தொழில்புரியும் இடங்களுக்கு எந்த ஆடை அணிந்து செல்வது என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கும்.

வேலைத்தள சூழலுக்கு ஏற்பவா அல்லது தமது கலாசாரத்திற்கு ஏற்பவா ஆடைகளை அணிவது என்பது குறித்து தீர்மானிப்பதற்கு பலர் திணறுவர்.

குறிப்பாக, அலுவலகங்களுக்கு ஏற்ற ஆடைகளாக பெண்கள் ஜீன்ஸ்- பிளவ்ஸ், எலிபன்ட் கிட், குட்டைப் பாவாடை, முழு நீளக் கை உடைய பிளவ்ஸ், கோட் சூட் போன்ற ஆடைகளை அணிவது சிறந்தது.

ஆண்களுக்கு அநேகமாக இந்தப் பிரச்சினை இருப்பதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு பொதுவான ஆடையாக ஜீன்ஸும் ஷேர்ட்டும்  இருப்பதால் அவர்கள் ஆடைகள் குறித்து பெரிதும் அலட்டிக்கொள்வது இல்லை. இருந்தாலும் ஒரு சில ஆண்கள் அவர்கள் அணியும் ஆடைகள் அலுவலகங்களுக்கு பொருத்தமானதாக இருக்காது.

அலுவலகங்களில் உயர் பதவிகளை வகிகும் ஆண்கள் இந்த ஆடைகளை அணிந்து கழுத்துப்பட்டி கருப்பு கோட் அணிந்து அதற்கேற்ற பாதணிகள் அணிந்து சென்றால் அழகாக இருக்கும். 

சில ஆண்கள் கழுத்துப் பட்டியை தனது பொக்கெட்டுக்குள் வைத்துவிடுவார்கள். இவர்களுக்கு கழுத்துப்பட்டியென்றாலே அது ஒவ்வொமை தருவதாகதான் அமையும். இந்த கழுத்துப்பட்டி அணியும்போதுதான் கம்பீரமான அழகான தோற்றத்தைத் தரும் என்பதை இவர்கள் உணர்ந்துக்கொள்ள மறுக்கின்றார்கள். அதேவேளை வேலைக்குப் பொருத்தமில்லாத சூழலில் கழுத்துப்பட்டி அணிவதும் வேடிக்கையானதாகவே இருக்கும்.
alt
இதைத் தவிர அலுவலகங்களுக்கு என்று ஒரு சிறப்பு இருக்கின்றது. அதற்கு பங்கமேற்படுத்தும்  வகையில் டெனிம், ரீஷேர்ட் அணிதல், காற்சட்டைக்கு வெளியே ஷேர்ட்டை விட்டுவைத்தல், சாதாரண காலணிகள் போன்றவற்றை அணிதல் ஆகியவற்றை சில அலுவலகங்கள் விரும்புவதில்லை. பொதுவாக வார இறுதி நாட்களில் விதிவிலக்கு அளிக்கப்படும்.

பொருத்தமான ஆடை அணியத் தவறும்போது எமது மதிப்பை நாம் இழக்கின்றோம் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

பெண்களைப் பொறுத்தவரை மெல்லிய உடல்வாகு கொண்ட பெண்கள் ஜீன்ஸ், முழுநீளக்கையுடைய பிளவ்ஸ் போன்ற ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிந்தால் அது அவர்களுக்கு 'ஒபிஸ் லுக்கை' தருவதுடன் அவர்கள் வேலையை சஞ்சலமின்றி இலகுவாக இருந்து செய்து முடிப்பதற்கு உதவுவதாக அமையும்.

அதேபோன்று பருமனான உடல்வாகு கொண்ட பெண்கள் குட்டைப்பாவாடையும் முழுநீளக்கை பிளவ்ஸும், அதற்கு மேலாக கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் கோட் போன்று அணிந்தால் அது அவர்களை எடுப்பாக காட்டும்.

அதேபோல் எலிபன்ட் கிட் அல்லது ஜீன்ஸ் அணிந்து அதற்கேற்ற டொப்ஸ் அணிபவர்கள் ஆடம்பரமல்லாத பாதணிகளை அணிந்து சென்றால் இந்தத் தோற்றம் எம்மில் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

altபொதுவாக நாம் அணியும் ஆடைகளே எமது உணர்வை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். ஜீன்ஸ் ரீ ஷேர்ட் போன்ற ஆடைகளை அணியும்போது மனதில் சுறுசுறுப்பான உணர்வு ஏற்படுவதுடன் துணிச்சலும் அதிகமாகிறது. இதன்போது எமது நடையில் கூட மாற்றம் தென்படும்.

இதைவிட இந்த ஆடைகள் மிகவும் சௌகரியமாக எம்மை இயங்கச் செய்கின்றன. பேரூந்தில் பயணம் செய்பவர்களுக்கு இவ்வாறான ஆடைகளே சிறந்தது.

சில தொழில் ஸ்தளங்களில் வேலைத் தளங்களுக்கான ஆடைகளை நிர்வாகிகளே நிர்ணயித்திருப்பர்.

நிறுவனங்கள் விதித்துள்ள ஆடைக்கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமக்கு கிடைத்த தொழிலை ஒப்புக்கொள்ளாமல் சென்றவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

சிலர் இந்த ஜீன்ஸ், எலிபன்ட் கிட் போன்ற ஆடைகள் கலாசார சீரழிவான ஆடையாக கருதுகின்றனர். ஆனால் இந்த ஆடைகளே எமது உடலை ஆங்காங்கே தெரியாமல் முழுதாக மறைக்கின்றது. மற்ற ஆடைகளைப்போன்று அங்கு உடல் தெரிகிறதா, இங்கு தெரிகிறதா என்று ஆடை குறித்த நினைப்பிலே இல்லாமல் எந்த பயமும் இன்றி வேலையில் முழுக் கவனத்தையும் செலுத்தவும் இத்தகைய ஆடைகள் உதவும்.

0 Response to "அலுவலகங்களுக்கு ஏற்ற ஆடை எது?"

Post a Comment