யூடியுப் வீடியோவை நேரடியாக எந்த ஃபார்மட் ஆகவும் மாற்றி சேமிக்கலாம்.
எந்த விளம்பரமும் இல்லாமல் நேரடியாக யூடியுப் வீடியோவை எந்தஃபார்மட்டுக்கும் தகுந்தாற் போல் மாற்றி நம் கணினியில் சேமிக்கலாம்எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
தினமும் யூடியுப் வீடியோவை தரவிரக்க ஒரு இணையதளம் வந்துகொண்டு இருந்தாலும் பல தளங்களில் அதிகமான விளம்பரங்களாலும்யூடியுப் வீடியோவை மாற்ற அதிக நேரம் எடுத்துக்கொள்வதாலும் நாம்பயன்படுத்தாமல் இருக்கிறோம் இந்தப் பிரச்சினைகளை சரி செய்யும்விதமாக ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.downloadtube.org/
படம் 2
இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் இருப்பது போல் URL என்றகட்டத்திற்குள் யூடியுப் முகவரியை கொடுக்கவும் அடுத்து எந்தஃபார்மட் ( Format ) மாற்ற வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு[ Windows (.mpg) , Flash (.flv) , Mac (.mov) , Audio Only (.mp3) ,Mobile (.3gp) , iPod/PSP/iPhone (.mp4) ]Convert and Download என்ற பொத்தானை அழுத்தவும் சிறிது நேரத்தில்படம் 2-ல் இருப்பது போல் வரும் அதில் நாம் Download என்றபொத்தனை அழுத்தி நம் கணினியில் எளிதாக சேமித்துக்கொள்ளலாம்.எந்த விளம்பரமும் இல்லாமல் முகப்பு பக்கம் எளிமையாகவும்சேவைத் தரத்துடனும் உள்ளது. கண்டிப்பாக இந்த தளம் யூடியுப்வீடியோவை நாம் விரும்பும் ஃபார்மட் -ல் நம் கணினியில் சேமிக்கஉதவும்.


0 Response to "யூடியுப் வீடியோவை நேரடியாக எந்த ஃபார்மட் ஆகவும் மாற்றி சேமிக்கலாம்."
Post a Comment