கூகிள் - சில குறிப்புகள்

இணையத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கூகிளைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி! இந்த மாதத்தில் மிகவும் அதிகம்.

கூகிள் தனிப்பட்ட தகவல்களைத் திரட்டுகிறது:

வாடிக்கையாளர்களின் Email, Mobile Number, இன்னும் முக்கியமான தகவல்களைக் கூகிள் திரட்டியிருப்பதாகக் குற்றச்சாட்டு. நடந்தது கனடாவில்! கனடா மக்களின் அந்தரங்கத்தில் கூகிள் தலையிடுவதாக அலறுகிறார்கள். கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மக்களின் முக்கியத் தகவல்கள் கூகிள் வசம். கூகிள் என்ன சொல்லப் போகிறது?



சைனாவுடன் விளம்பர ஒப்பந்தம் ரத்து:

வரும் அக்டோபர் 27 முதல் 7 பெரிய விளம்பர நிறுவனங்களுடன் கூகிள் தந்து ஒப்பந்தத்தை ரத்து செய்கிறது. கடந்த சில மாதங்களாகவே சைனாவுக்கும், கூகிளுக்கும் உரசல்கள் இருந்து வருகிறது. இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட 40 % விளம்பர வருவாய் கூகிளுக்கு சைனா மூலம் கிடைக்கும் நிலையில் இந்த முடிவு கூகிளுக்குப் பாதகமாக அமையும் என்கிறார்கள் நிபுணர்கள்.

சமூக வலைத்தளத்தை மேம்படுத்துகிறது:

கூகிள் சமூக வலைத்தள மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. Orkut??? இல்லை! ஆர்குட், இந்தியாவிலும், பிரேசிலிலும் மட்டுமே மிகப் பிரபலமாக இருக்கிறது. இதர நாடுகளில் சுமாரான வரவேற்புதான்! கடந்த வருடம் வெளியான Google Wing ம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. தனது முயற்சியில் சற்றும் மனம்தளராத கூகிள், Google ME என்னும் சமூக வலைத்தளத்தை விரைவில் வெளியிடும். Facebook க்குக் கடும் சவாலாக இருக்கும் என்று கணிக்கிறார்கள்.

கூகிள் சுற்றுலா:

உலகின் புகழ்மிக்க இடங்களை அமர்ந்த இடத்திலிருந்து பார்வையிடலாம். Google தனது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பல்வேறு புகைப்ப்டங்களைச் சேர்த்திருக்கிறது. உலகை வலம்வரும் போது படங்களுடன் குறிப்புகளும் கிடைக்கும்!

கூகிள் - கனவு நிறுவனம்:

IT பணியாளர்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பில் கூகிள் கனவு நிறுவனமாகத் (Dream Company) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. கூகிளின் மனிதவளக் கொள்கைகளும் (HR Policies), நட்பான பணிச்சூழலும் (Friendly Wok Environment) கூகிள்மீது இந்திய இளைஞர்களைக் காதல் கொள்ளச் செய்கிறது! கூகிள் அலுவலகத்தின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்!!!


0 Response to "கூகிள் - சில குறிப்புகள்"

Post a Comment