குளிர்வித்தால்’ காப்பாற்றலாம்!

 
 விபத்தில் காயம் அடைந்தவர்களை அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் முன் `ஜில்’லென்ற தண்ணீரில் குளிர்வித்தால் காப்பாற்றலாம் என்று கண்டு
பிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.



இந்தப் புதிய நுட்பம், காயம் அடைந்தவரின் உடம்பை முழுமையாக மூடச் செய்யும். அதன் மூலம், மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்ய கூடுதல் நேரம் அளிக்கும் என்பது ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு.
விபத்தில் பாதிக்கப்பட்டவரின் இதயத் துடிப்பு நின்றுபோன நிலையில், மூளை சேதம் அடையாமல் இந்த உதவி காக்கும். மயக்க மருந்து, மூச்சு ஆதரவு எந்திரங்களும் தேவையில்லை.
முதல்முறையாக இந்த நுட்பத்தை மனிதர்களுக்கு செய்து பார்க்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இதில் மனித உடம்பை கிடுகிடுவென்று குளிர்வித்து ஆய்வு செய்யப்படும்.
இந்தக் குளிர் சிகிச்சை முறையை ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியும், மசா சூசெட்ஸில் உள்ள பொது மருத்துவமனையும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. இந்தச் சிகிச்சை முறையில், ஒருவரின் உடம்பு 10 டிகிரி சென்டிகிரேடு அளவுக்குக் குளிர்விக்கப்படும். சாதாரணமாக மனித உடம்பின் வெப்பநிலை 37 டிகிரி ஆகும். பொதுவாக மனிதர்களின் வெப்பநிலை 22 டிகிரிக்குக் கீழே இறங்கினால் அவர்கள் உடனே இறந்து விடுவார்கள். எனவே பாதுகாப்பான முறையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் மேற்கண்ட குளிர் சிகிச்சை ஆய்வுக்குத் தலைமை வகித்தவர் ஹசன் ஆலம். அவர் கூறுகையில், `துப்பாக்கிச் சூடு, கத்திக் குத்து, கார் விபத்து ஆகியவற்றில் காயம் அடைந்தவர்கள் மரணம் அடையும் அபாயம் அதிகம். அவர்களது உடம்பை அதீதமாகக் குளிர்விக்கும்போது, அது அவர்களின் மூளையும், உடல் உறுப்புகளும் பாதிப்படையாமல் காக்கும். விலங்குகளில் இந்த ஆய்வை தொடக்கநிலையாக மேற்கொண்டபோது நல்ல பலனைத் தந்துள்ளது’ என்றார்.

0 Response to "குளிர்வித்தால்’ காப்பாற்றலாம்!"

Post a Comment