தேநீர், மாரடைப்பை தடுக்கும் : புதிய ஆய்வில் தகவல்
நீங்கள் தேநீர் விரும்பிகளா? அப்படியாயின் உங்களை மாரடைப்பு தாக்குவதற்கான வாய்ப்பு குறைவு. தேநீரானது மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கின்றது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

எம்மில் அநேகமானவர்கள் தேநீர் பிரியர்கள். சிலருக்கு காலையில் எழுந்தவுடனே தேநீர் வேண்டும், இல்லையென்றால் அன்றைய பொழுதே மந்தமாக உள்ளதாக கூறுவார்கள். சிலருக்கு தேநீர் உற்சாகப் பானமாகவும் உள்ளது.
சிலர் அலுவலகங்களில் பகல் உணவை வயிறு நிறைய உணடு விட்டு நித்திரையில் கண்ணயர்ந்துப் போவார்கள். அவர்கள் தேநீரின் மணத்தை நுகர்ந்தால் போதும், நித்திரை பறந்துவிட, ஓடிச்சென்று தேநீரை எடுத்து வந்து அருந்துவார்கள். பின்னர் அவர்களது இயக்கமே மின்னல் வேகமாக இருக்கும்.
உண்மையில் தேநீர் ஒர் உற்சாகப் பானம்தான். அதைவிட இப்போது தேநீர் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும் மருத்துவப் பானமாகவும் உள்ளது என அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தொடர்ச்சியாக தினமும் 03 கோப்பை கறுப்பு தேநீர் அல்லது பச்சை தேநீர் (கிறீன் ரீ) அருந்தினால் இதயப் பிரச்சினைகள் 11 சதவீதம் குறையும் என மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தேநீரிலுள்ள 'flavonoids' எனும் பொருள், இரத்தக் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரோல் மூலம் ஏற்படும் ஒருவகைகற்களை தடுக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு கப் தேநீரில் 150- 200 மில்லிகிராம் flavonoids' உள்ளது. 'அன்ரி ஒக்ஸிடன்ட்ஸ்களை' பொறுத்தளவில் இரு கோப்பை தேநீர் 5 மரக்கறிகளுக்கு அல்லது இரு அப்பிள்களுக்கு சமமானது என இந்த ஆய்வு கூறுகிறது.
தேயிலை ஆலோசனை சபையைச் சேர்ந்த டாக்டர் கத்தரின் தேநீரில் பாலை சேர்த்து அருந்தினாலும் மேற்படி நன்மைகள் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
good new aNNa