உடல் நலக்குறிப்புக்கள்
முகத்தில் வட்டம் வட்டமாகத் தேமல் போல் ஒரு வியாதி வருகிறது. இதற்குச் சொறியாஸிஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது தொத்து வியாதி அல்ல. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் இது அதிகமாக வருகிறது. பெண்களைவிட ஆண்களுக்குத்தான் இந்தத் தோல் வியாதி அதிகமாக வருகிறது. இந்த நோய் வந்தவர்களில் அநேகம் பேருக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறது. இதற்கு மருந்து போட்டால் குணமாகி விடுகிறது. ஆனால் திரும்பத் திரும்ப வருகிறது; போய் விடுகிறது. இதற்கு என்ன காரணம் என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
தினசரி பாதங்களைச் சுத்தமாகக் கழுவாவிட்டால் கால் விரல்களின் இடுக்குகளில் தோல் வியாதி வருகிறது. அரிப்பு வருகிறது. தோல் நைந்து போய் ரணமாகிறது. இதற்கு மஞ்சளை அரைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் சுண்ணாம்பைக் கலந்து கொள்ளுங்கள். கால் விரல்களில் இதைத் தடவுங்கள். புண் மறைந்துவிடும். இந்தச் சிகிச்சையைப் படுக்கப் போகும் போது செய்யுங்கள்.காலில் ஈரம் படக்கூடாது.
இருதய நோய் உள்ளவர்கள் உயரமான மாடிப் படிகளில் ஏறக் கூடாது. குலுங்கக் குலுங்கச் சிரிக்கக் கூடாது. குமுறிக் குமுறி அழக் கூடாது. உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது. சிகரெட் புகைக்கக் கூடாது. பீர்இ பிராந்திஇ விஸ்கிஇ ரம் எதையும் தொடக் கூடாது. இந்தக் கட்டுப்பாடுகளோடு இருந்தால் இன்னும் கொஞ்ச காலம் ஆனந்தமாக இருக்கலாம். இல்லாவிட்டால்இ காலஞ்சென்றவர்கள் பட்டியலில் இவர்களும் சேர வேண்டியதுதான்.
மூலநோய் உள்ளவர்கள் அடிக்கடி கோப்பி டீ சாப்பிடக் கூடாது. காலையில் நீராகாரம் சாப்பிட வேண்டும். தயிர் மோர் சாப்பிடலாம். இரவில் படுக்கப் போகுமுன் பாரபின் மெழுகு எண்ணெய்யை ஒரு கரண்டி சாப்பிட்டு வரவேண்டும். மலம் வலி இல்லாமல் கழியும். காரப் பொருட்களை ஒதுக்க வேண்டும்.
அம்மை வார்த்திருக்கும் போது சிலருக்குத் தொண்டை கம்மிப் போகும். அம்மை குணமான பிறகும் தொண்டைக் கம்மல் இருந்து கொண்டே இருக்கும். இதை அப்படியே விட்டுவிடக் கூடாது. கற்பூரவல்லி இலையைக் கொண்டு வந்து அரை அவுன்ஸ் சாறு எடுக்க வேண்டும். இதில் குன்று மணி எடையுள்ள கோரோசனை மாத்திரையை நசுக்கிக் கரைத்து வைத்துக் கொண்டு, காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் தொண்டைக் கம்மல் சரியாகிவிடும்.
உங்களுக்கு தலைமுடி உதிர்ந்து சொட்டை ஆகிக் கொண்டு வருகிறதா? கவலைப்படாதீர்கள். கவலைப்பட்டால் அந்தக் கவலையிலேயே அரைச் சொட்டை முழுச் சொட்டையாகிவிடும்! தலைச் சொட்டைக்கு மருந்து, மஞ்சள் நிறமாக உள்ள எலுமிச்சம் பழத்தை எடுத்து நறுக்குங்கள். மயிர் உதிர்ந்து வழுக்கையான இடத்தில் இந்த எலுமிச்சம்பழ மூடியை அழுத்தித் தேயுங்கள். சில நிமிடங்கள் ஊற வையுங்கள். பிறகு ஏதாவது ஒரு ஷாம்பூவைத் தேய்த்து நன்றாகத் தலையை அலசுங்கள்இ உலர விடுங்கள். இப்படி வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தால் தலையில் பொட்டலாய் இருந்த இடத்தில் முடி வளரத் தொடங்கும்.
உணவு ஜீரணமாவதற்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம் வயிற்றில் உற்பத்தியாகிறது. இந்த அமிலம் அதிகமாகச் சுரந்தால் பெப்டிக் அல்சர் வியாதி வருகிறது. வயிற்றில் இந்த அமிலம் சுரக்காமல் இருந்தால் அனீமீயா குடல் கேன்சர் வருகிறது. வயிற்றில் அமிலம் அதிகம் சேர்ந்தாலும் கெடுதல் ! குறைவாக இருந்தாலும் கெடுதல் ! அமிலம் அளவோடு இருக்க வேண்டும்.
0 Response to "உடல் நலக்குறிப்புக்கள்"
Post a Comment