கவர்ச்சி கண்களுக்குரிய பயிற்சிகள் !


ஆன்மாவின் கதவுகள் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி’ – இவையெல்லாம் நம் கண்கள்தான்.
நமது எண்ணங்கள் நல்லனவாக இருக்கும்பொழுது நாமும் மகிழ்ச்சியாக இருக்கிறோமல்லவா? அப்பொழுது நமது கண்கள் மிகவும் பிரகாசமானதாக இருக்கும்.
சிரிக்கும்பொழுது கண்கள் சுருங்காமல் இருக்கவும் கண்களுக்கருகில் சுருக்கங்கள் இல்லாமல் இருக்கவும் நெற்றியிலும் கண்களுக்கு அடியிலும் ‘ஷெலோ’ டேப் போட்டு ஒட்டிக் கொண்டு சிரித்துப் பழகலாம். இதனால் சிரிக்கும்பொழுது கண்கள் இடுங்கி சுருக்கம் விழாது. முயன்று பாருங்கள்.
தலையை அசைக்காது கண்களை மட்டும் அசைத்து நேராக மேல் கீழ் பக்கவாட்டில் என பார்வையைச் செலுத்துங்கள். இதனால் கண்களுக்கு மட்டுமல்லாது கண்களைச் சுற்றியுள்ள தசைப்பகுதிக்கும் பயிற்சியாகிறது. இப்பயிற்சியின்போது விழிகளை மட்டும் திருப்புங்கள். தலையைத் திருப்ப வேண்டியதில்லை.
கண்களின் பராமரிப்பில் பயிற்சி மட்டுமல்லாது ஓய்வும் அவசியமான ஒன்றாகிறது. இதற்கு பன்னீரில் தோய்க்கப்பட்ட குளிர்ச்சியான பஞ்சுவில்லைகளை கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் கண்களை மூடி ஓய்வெடுக்க கண்கள் புத்துணர்ச்சி பெறும்.
கண் இமைகள் மீது சிறிது விளக்கெண்ணெய் தடவி வர கண்கள் எரிச்சல் சூடு நீங்கி குளிர்ச்சியாகவும் பளபளப்பாகவும் விளங்கும்.
முழங்கைகளை மேஜைமீது ஊன்றிக்கொண்டு உள்ளங்கைகளால் கண்களின் வெளிச்சம் படாதவாறு பொத்தி பொத்தி கைகளை அகற்றவும் இதுவும் ஒரு நல்ல பயிற்சி. இந்தப் பயிற்சியினால் கண்கள் மட்டுமல்ல கண்களின் விழிகளிலுள்ள ஈரப்பதமும் சமச்சீரடைகிறது. கண்களைச் சுற்றிய பகுதிகளில் இரத்த ஓட்டம் துரிதமாகச் செயல்படுவதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
படித்தல், தையல் தொலைக்காட்சி பார்த்தல்,  கணினி வேலை மற்றும் ரைப்பிங் போன்ற கண்களுக்கு பளுவான வேலையுள்ளவர்களுக்கு இது மிகவும் எளிய பயிற்சியாகும். இதனால் கண்களின் சோர்வு நீங்கும்.
விட்டமின் ‘பி’ கண்களுக்கான விட்டமின் எனப்படுகிறது. இவ்விட்டமின்கள் அமைந்த உணவு வகைகள் கண்களுக்கு அழகூட்டும்.
எளிய வைத்திய முறைகள்
அடர்த்தியான புருவங்களுக்கு மிதமான சூடுள்ள விளக்கெண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெய் சிறிது வைத்து தினசரி புருவங்களை அழுத்தித் தேய்த்து வரலாம்.
கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க வெள்ளரிச்சாறு அப்பிள் உருளைக்கிழங்கு விட்டமின்  ஒயில் பால் கலந்த பேரீச்சை விழுது இவற்றில் ஏதாவதொன்றை கண்களைச் சுற்றி தடவி ஊறியபின் கழுவ கருமை நிறம் மறையும்.
செராமைட்ஸ் இவை மாத்திரை வடிவில் கிடைக்கும். இவற்றிலுள்ள பவுடரை ரோஸ்வாட்டர் கலந்து கண்களைச் சுற்றித் தடவலாம்.
பிரகாசமான கண்களுக்கு திரிபலா பவுடர்  வெள்ளரிச் சாறு உருளைக்கிழங்கு சாறு கலந்து தடவி வரலாம்.
வெய்யில் காலங்களில் ஏற்படும் கண் எரிச்சலுக்கு வெள்ளரிக்காயை வட்டத் துண்டுகளாக்கி கண்கள் மீது வைத்து சிறிது நேரம் ஓய்வெடுக்க கண் எரிச்சல் நீங்கும்.
உருளைக்கிழங்குத் துண்டு கருவளையத்தைப் போக்கும் ஆற்றல் பெற்றது.
பீங்கான் கிண்ணத்தில் சிறுசிறு பஞ்சு துண்டுகளை ரோஸ்வாட்டர் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். கோடையில் வெளியில் சென்றுவந்தாலோ அதிக நேரம் டி.வி. கம்ப்யூட்டர் முன் இருந்தாலோ இந்த துண்டுகளை கண்ளுக்கு வைத்து பத்து நிமிடங்கள் ஓய்வெடுக்க கண்கள் புத்துணர்ச்சி பெறும். கருவளையம் நீங்கும்

0 Response to "கவர்ச்சி கண்களுக்குரிய பயிற்சிகள் !"

Post a Comment