கோ....

கே.வி. ஆனந்த் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் மற்றுமொரு வெற்றி படம் என்று சொல்ல கூடிய திரைப்படமாக வந்திருக்கிறது “கோ. உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு பின்பு வெளிவந்து இருக்கும் ஜீவாவின் இரேண்டாவது படம். அவருக்கு புதிய பாதையை வழிவகுத்து வெற்றி நாயகனாக வலம் வர வைக்கபோகிறது என்பது மட்டும் இப்போதைக்கு உறுதி.  
 
கே.வி ஆனந்த்தின் அயன் பாதிப்புகள் நிறையவே உள்ளடக்கி கோ திரைப்படம் வெளிவந்து இருக்கிறது. ஒரு பத்திரிக்கையின் நிருபராக இருக்கும் ஜீவா, இந்திய அரசியல் சாக்கடையினை சுத்தம் செய்ய முயற்சி செய்து தனது கல்லூரி நண்பர்களான அஜ்மல் முதலியோரை தேர்தலில் நிற்க வைத்து ஆட்சிக்கு கொண்டு வருகிறார். அதில் எப்படி அஜ்மல் மட்டும் நக்சலைட்டுகளுக்கு விலை போகிறார்? ஆட்சிக்கு வந்த அந்த இளம் கூட்டணி அஜ்மல் போன்ற ஒரு துரோகியால் அழிந்து போய்விட கூடாது என்று, ஜீவா என்ன செய்ய முயல்கிறார்? என்ற கதையை சுவாரசியமாக பிரகாஷ்ராஜ்,கோட்டா சீனிவாசராவ்,பியா,கார்த்திகா என்று பலரையும் உள்ளடக்கி வெற்றிகரமாக தர முயற்சி செய்து அதை பெரும்பாலும் வெற்றிகரமாக தந்து இருக்கிறார் கே.வி.ஆனந்த்.
 
ஜீவா பத்திரிக்கையின் களநிருபராக அதாவது படப்பிடிப்பாளராகவும்,செய்திகளை சேகரிப்பவராகவும் அதகளம் பண்ணி இருக்கிறார். சூரியாவுக்கு பிறகு பொருத்தமான தேர்வு ஜீவா என்று சொல்ல முடியும். ஆரம்ப காட்சிகளிலிருந்து, அவர் காட்சிகளுடன் இயல்பாகவே பொருந்தி போகிறார். வங்கி கொள்ளையை படம்படிப்பதிலிருந்து, கோட்டா சீனிவாசராவ், பிரகாஷ்ராஜ் போன்ற இந்திய அரசியல்வாதிகளை துகில்உரித்து காட்டுமிடங்களில் எல்லாம் ஜீவாவும், அவரது காமிராவும் மிளிர்கின்றன. ஜீவா காதல் காட்சிகளிலும், கார்த்திகாவுக்கும், பியாவுக்கும் இடையில் சிக்கும் போதும், நடிப்பால பாராட்டு பெறுகிறார். நகைச்சுவையிலும் தூள்தான்! ஆக மொத்தத்தில் ஜீவாவின் நடிப்பு பசிக்கு தீனி போட்ட படங்களில் இதுவும் ஒன்று என்று சொல்ல முடியும்.அதை போலவே, அஜ்மலும் சரியான தேர்வு!!! பல இடங்களில் நடிப்பால் மிரட்டுகிறார்.
 
கார்த்திகா ராதாவின் மகள். அவரை விடவும் உயரமாக, எடுப்பான தோற்றத்தில் படத்தில் கலக்கி இருக்கிறார். நடிப்பதுக்கான சந்தர்ப்பங்கள் குறைவு என்ற போதும், கிடைத்த இடங்களில் எல்லாம் சிக்ஸ்சர்தான்!! கார்த்திகா இனி வரும் படங்களில் தன்னை நிருபித்து முன்னணிக்கு வர வாழ்த்து சொல்லலாம். கார்த்திகாவை அவரகளது பத்திரிகை நிருபர் “இவர்தான் இலங்கை செய்தியை கடந்தகாலங்களில் ஈடுபாட்டுடன் cover செய்தவர், என்று சொல்லுமிடத்தில் இலங்கை ரசிகர்களிடம் கே.வி.ஆனந்த் மூக்குடைபட்டு போனார் என்பது, திரையரங்கில் இருக்கும் அனைவருக்குமே தெரியும். அடுத்தவர், முதல் பாதியை கலகல என வைத்து விட்டு, இடைவேளையுடன் மனதில் பதிந்து செல்லும் பியாவின் கதாபாத்திரம். ஜீவாவை காதலிக்கும் இடமாக இருந்தாலும் சரி, கார்திகாவுடன் முட்டி மோதுவதாக இருந்தாலும் சரி, பாடலில் கவர்ச்சி காட்டுவதாக இருந்தாலும் சரி, தனது பணியை செவ்வனே செய்து இருக்கிறார் பியா.
 
படத்தில் வரும் பிரகாஷ்ராஜ்,கோட்டாசீனிவாசராவ் இந்திய அரசியலின் குறியீட்டு பாத்திரங்கள் என்று சொல்ல முடியும். முடிந்த வரை, இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தேர்தல் முடிந்த பின்பு, வெளியீடு செய்து இருப்பதுக்கு இந்த படத்தின் ஆழமான சில உண்மைககள் தாத்தாவை பாதித்து விட கூடாது என்ற காரணமாகவும், இருக்கலாம். ஒருவேளை, படம் தேர்தலுக்கு முதல் வந்து இருந்தால், ஆட்சி மாற்றம் வந்தாலும், வந்து இருக்கும், படம் பார்த்து ஓட்டு போடுபவர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள் தானே!!!!
ஹாரிஸ் ஜெயராஜ், இசையை சுட்டாரோ?, அப்படியே எடுத்தாரோ? அது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், “என்னமோ ஏதோ பாடல் மூலம் அவரது ரசிகர்களை பைத்தியமாக மாற்றி வைத்து இருக்கிறார். படத்ஹ்டில் என்னை அடுத்து மிகவும் கவர்ந்த பாடல், “நெற்றி பொட்டில் அருமையான சந்தர்ப்பத்ஹ்டில் படமாக்கபட்டிருக்கிறது. கேவி.ஆனந்த் படத்ஹ்டில் பாடல்காட்சிகளை பற்றி சொல்லவும் வேண்டுமா? கலக்கி இருக்கிறார். படத்தை போலவே, பாடல் காட்சிகளுக்கும் நிறையவே ரிஸ்க் எடுத்து இருக்கிறார் என்று சொல்லலாம். பின்னணி இசையிலும், ஹாரிஸ் தனியாக தெரிகிறார். ஆனால், அந்த பின்னணி இசைகளை எங்கோ கேட்ட நினைவு!!!! எடிட்டிங் ஆண்டனி என்றால் சொல்லவும் வேண்டுமா? படம் முழுவதும் தனி முத்திரை பதித்து இருக்கிறார். அதிலும், இறுதி காட்சிகளில் காட்சிகளை எட்டிட் செய்த விதமும், இடைவேளையில் குண்டு வெடிப்பு சம்பவம் காட்சியாக்க பட்ட விதமும், சூப்பர்!!!
 
ஆனாலும், அயன் போன்ற படத்தை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு சில இடங்கள் ஏமாற்றம்தான்!! என்னை போன்ற ரசிகர்களால் கூட, இரெண்டாம் பாதி கதையை ஊகிக்க முடிந்தது. கே.வி.ஆனந்த்க்கு ஒரு தோல்விதான். அதிலும் படத்தின் கதையில் எனக்கு சில சந்தேகங்கள் ரசிகர்கள் இருந்தால் தீர்த்து வையுங்கள். ஒரு நிருபரின் கேள்விக்காக முதலமைச்சர் இப்படி தெருவில் இரங்கி நடப்பாரா? என்னதான் நிருபராக இருந்தாலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் இப்படி படமெடுத்து கொண்டுதான் இருப்பார்களோ? இப்படி பல பல சந்தேகங்கள்???? அணைத்து நட்சத்திரங்களையும் ஒரே பாடலில் கொண்டு வர எடுக்கபட்ட முயற்சியும் சற்று சருக்களாக மைந்து போனது!!! அந்த காட்சிகள் பெரிதாக படத்திற்கு வலுவும் சேர்க்க வில்லை. கடைசி கிளைமாக்ஸ் காட்சிகளில் அழுத்தம் குறைவாகவே இருக்கிறது. இரெண்டாம் பாதியில் இயக்குனர் கொஞ்சம் தாராளமாகவே சறுக்கி இருக்கிறார்.
 
கோ இம்முறை வந்து இருக்கும் படங்களில் சமூகம் மீதான அக்கறை கொண்ட ஒரு படமாக வந்து இருக்கிறது. பலரையும் பல்வேறு வகையில் சிந்திக்க வைத்து இருக்கும் என்று சொல்லலாம். அதிலும், பிரகாஷ்ராஜ் இறுதியில் சொல்லும் வசனங்கள் சாட்டையடி!!! என்ன இந்த படத்ஹ்டையும் உதயநிதி வாங்கி வெளியிட்டு இருக்கிறார் என்பதுதான் எனக்கு கொஞ்சம் படத்தை பார்த்த பிறகு இருக்கும் அதிர்ச்சியும், சஸ்பென்ஸ்சும்!!!! படத்தை பார்த்தால் ஏன்? அப்படி என்று உங்களுக்கு தெரியும்!!!

0 Response to "கோ...."

Post a Comment