திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? அடிக்கடி புலம்புகிறீர்களா?


திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து… என்று அடிக்கடி புலம்புகிறீர்களா? கவலையே வேண்டாம். இந்த சின்ன ட்ரீட்மென்ட் மட்டும் போதும். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு! 


அது என்ன ட்ரீட்மென்ட்? கட்டிப்பிடி வைத்தியம் தாங்க அது. கணவன்-மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ரொப்ளம் என்கிறது ஒரு ஆய்வு. அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது கணவன்-மனைவியர் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டிப்பிடி வைத்தியம் செய்யும்போது `இச்` மழை பொழிய வேண்டுமாம். 


அப்போது தான் அந்த வைத்தியத்திற்கு `பவர்’ இருக்குமாம். இப்படி கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்களை அள்ளித்தருகிறது அந்த ஆய்வு. அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 5 ஆயிரம் தம்பதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆய்வில் பங்கேற்ற தம்பதிகளிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பது தான்!


எல்லோரும் மளமளவென்று கருத்துக்களை கொட்டினர். சில தம்பதியர் கூறியதை கேட்டு, கேள்வி கேட்டவர்களே கிளுகிளுப்பாகிவிட்டனர். அந்த அளவுக்கு `ஓபனாக’ பதில் கூறிவிட்டனர் அந்த தம்பதியினர். அனைத்து தம்பதியர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு, கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது பல சுவையான தகவல்கள் கிடைத்தன. 


கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தினமும் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். ஒரு நாளைக்கு குறைந்தது 4 தடவையாவது அவ்வாறு செய்ய வேண்டுமாம். விருப்பம் இருந்தால் கணக்கு வழக்கின்றி கட்டிப்பிடிக்கலாமாம். வீட்டில் சும்மா இருக்கும்போது கட்டிப்பிடித்துக் கொண்டே இருந்தால் `போர்’ அடித்து விடுமாம்.


அதனால், வீட்டை விட்டு புறப்படும்போதோ அல்லது வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போதே துணையை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டுமாம். கட்டிப்பிடி வைத்தியத்தோடு, பொழுதுபோக்கு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம். போவோமா ஊர்கோலம் என்று அடிக்கடி வெளியிடங்களுக்கு ஜோடியாக `விசிட்’ அடித்தால் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் `கிக்` இருக்குமாம். 


ஒரு மாதத்தில் 7 மாலை நேரங்களில் கணவன்-மனைவியர் ஒன்றாக பொழுதை போக்க வேண்டுமாம். அதில், 2 வேளைகளில் வெளியே டின்னர் சாப்பிட வேண்டுமாம். மாதத்திற்கு 2 முறை காதல் உணர்வுடன் கணவன்-மனைவி இருவரும் வெளியே செல்ல வேண்டுமாம். அவர்கள் செல்லும் இடம் இயற்கை எழில் மிகுந்த தனிமையான இடமாக இருக்க வேண்டியது அவசியமாம். 


அந்த இடத்தில் காலாற நடந்து செல்வதுடன், அவ்வப்போது செல்லமாக துணையை கிள்ளி கிச்சுக்கிச்சு மூட்ட வேண்டுமாம். இப்படி பார்ட் டைமாக மட்டும் வெளியே செல்வது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோரையும் ஓரம்கட்டிவிட்டு மாதத்திற்கு ஒரு நாளாவது கணவன்-மனைவி இருவரும் வெளியே ஊர் சுற்ற போக வேண்டுமாம். 


அப்போது ஓட்டலுக்கு சென்று பிடித்த உணவு அயிட்டங்களை ஒரு வெட்டு வெட்ட வேண்டுமாம். சாப்பிட்டு முடித்ததும், பிடித்த தியேட்டரில் பிடித்த படத்தை பார்க்க வேண்டுமாம்.மேலும், மாதத்திற்கு ஒரு முறை கணவன் தனது மனைவிக்கு ஏதாவது ஒரு கிப்ட் வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டுமாம். பெரிய அளவில் கிப்ட் கொடுக்க முடியாவிட்டாலும், பூச்செண்டாவது வாங்கிக் கொடுக்க வேண்டுமாம்.


- இப்படி தகவல்களை கொட்டி இருக்கிறார்கள் அந்த தம்பதியர்கள். இவ்வாறு வாழ்க்கையை வாழ்ந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அந்த திருமண வாழ்க்கை ஆனந்தமாக இனிக்கும் என்று இறுதியாக தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள், ஆய்வு நடத்தியவர்கள். என்ன தம்பதியரே… நீங்களும் இப்படித் தானே வாழப்போறீங்க? அது சரி… கட்டிப்பிடி வைத்தியத்தை மட்டும் மறந்துவிட மாட்டீங்களே
 

0 Response to "திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? அடிக்கடி புலம்புகிறீர்களா?"

Post a Comment